சாய்ந்தாடும் குதிரை
எனது புதிய சிறுகதைகளின் தொகுப்பு சாய்ந்தாடும் குதிரை. இதில் 16 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. சாய்ந்தாடும் குதிரை படித்தவுடன் எழுதுகிறேன். எங்கள் வீட்டில் ஒரு சிகப்பு நிற மரக்குதிரை இருந்தது. பதற்றத்துடன் இரட்டை சடை போட்ட சிறுமியாக அக்கா குதிரையில் அமர்ந்திருக்கும் ஒரு போட்டோ உண்டு. இப்போது குதிரையும் இல்லை. அக்காவும் இல்லை. ஆனால் எனது மனம் இன்று கசிவது கதையில் வரும் இரண்டு மரக்குதிரைகளுக்காக.சாய்ந்தாடும் குதிரை அற்புதமான கதை சந்தானம். பெங்களூர்.
