புத்தகப் பரிந்துரைகள் -1
சென்னைப் புத்தகக் காட்சியில் நிறைய புதிய நூல்கள் வெளியாகியுள்ளன. நான் முக்கியம் எனக் கருதும் சில நூல்களைப் பரிந்துரை செய்கிறேன். இஸ்ஸாவும் பூஸனும் ஜப்பானின் புகழ்பெற்ற ஜென் கவிகளான இஸ்ஸா மற்றும் பூஸனின் தேர்ந்தெடுக்கபட்ட கவிதைகளை யுவன் சந்திரசேகர் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். நூல்வனம் வெளியிட்டுள்ளது. மிகச்சிறந்த புத்தகமாக்கம். அனாகத நாதம். இளந்தலைமுறையின் சிறந்த சிறுகதையாசிரியரான செந்தில் ஜெகன்நாதனின் சிறுகதைகளின் தொகுப்பு அனாகத நாதம். தனித்துவமிக்க மொழியழகும் கதைக்களமும் கொண்ட நேர்த்தியான கதைகள். சொற்றுணை பதிப்பகம் வெளியிட்டுள்ளது …
