மன்னிப்பு : EMI வசதி உண்டு
புதிய சிறுகதை. ஜனவரி 25. 2026 தெரியாத எண்ணிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்திருந்தது. வாசவன் அதனை எடுக்கவில்லை. அதே எண்ணில் காலை பத்து மணிக்கும் அழைப்பு வந்ததாக ஞாபகம். லோன் கொடுப்பவர்கள் மற்றும் ஏமாற்றுப்பேர்வழிகள் அதிகமாகத் தொடர்பு கொள்கிறார்கள் என்பதால் அவர் தனது போனில் பதிவு செய்திராத எண்களில் இருந்து வரும் எந்த அழைப்பையும் ஏற்பதில்லை. முக்கியமான அழைப்பு என்றால் வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டு செய்தி அனுப்புவார்களே என்று நினைத்துக் கொள்வார். அன்றாடம் இரவு ஏழு மணிக்கு …
