திருநெல்வேலி புத்தகத் திருவிழாவில்
9வது நெல்லை புத்தகத் திருவிழாவில் கலந்து கொள்கிறேன். பிப்ரவரி 20 வெள்ளிக்கிழமை மாலை எழுத்தாளர் அ.மாதவையா வாழ்வும் எழுத்தும் குறித்து உரையாற்றுகிறேன். அ. மாதவையா தமிழின் முன்னோடி நாவலாசிரியர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பெருங்குளம் என்ற கிராமத்தில் பிறந்தவர். ஆரம்பக் கல்வியைத் திருநெல்வேலியில் படித்திருக்கிறார். சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் பயின்றவர் Salt Inspector ஆகப் பணியாற்றியுள்ளார். முத்துமீனாக்ஷி, பத்மாவதி சரித்திரம், கிளாரிந்தா போன்ற நாவல்களை எழுதியுள்ளார் இந்தியாவின் புகழ்பெற்ற கானுயிர் புகைப்படக் கலைஞரும் சுற்றுச்சூழல் ஆய்வாளருமான எம். கிருஷ்ணன் …

