இரண்டு ஊசிகள்
தனது என் சரித்திரம் நூலில் தமிழ்தாத்தா உ. வே. சாமிநாதையர் , தனது பாட்டனாரைப் பற்றி ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார். வேங்கடாசலம் என்ற அந்தத் தாத்தா மரணத்தருவாயில் உ.வே.சாவின் அன்னையை அருகில் அழைத்து “ நீ எனக்கு எவ்வளவோ உபசாரம் செய்திருக்கிறாய் . நான் உன்னைப் பல சமயங்களில் கடிந்து பேசியிருக்கிறேன் . வருத்தப்படாதே. நீ நல்ல பெண் ” என்று சொல்லிவிட்டுத் தன்னுடைய தலைமாட்டிலுள்ள சிறு மூட்டையை எடுத்து . அதில் போடப்பட்டிருந்த ஒரு முடிச்சை …









