Month: March 2026

“எம்பாவாய்“ வாசிப்பில் உருவாகும் உறவு

. பேராசிரியர் சாமி. பொ. விருதுநகர் நன்மதி எனும் அரிதானப் பெயர் கொண்ட ஒரு பெண்மணியின் மகள் தனது அம்மாவைப் பற்றி கூறுவது போல எழுதப் பட்ட கதைதான் “எம்பாவாய் “. 2014ல் வெளியான சிறுகதை. அவளது வீடு சிறுகதைத் தொகுப்பில் உள்ளது, சிறுகதையின் தலைப்பைப் பார்த்தவுடன் நம் அனைவருக்குமே ஸ்ரீ ஆண்டாள் எழுதிய திருப்பாவைதான் நினைவுக்கு வரும். இந்தக் கதைக்கும் ஸ்ரீ ஆண்டாளுக்கும் இடையே என்ன தொடர்பு இருக்கிறது என்னும் எண்ணத்துடன் கதையினை வாசிக்க ஆரம்பித்தேன். …

“எம்பாவாய்“ வாசிப்பில் உருவாகும் உறவு Read More »

தகழி

மலையாள எழுத்தாளர் தகழி சிவசங்கரன்பிள்ளை குறித்து எம். டி. வாசுதேவன் நாயர் இயக்கிய ஆவணப்படம். சாகித்ய அகாதமி தயாரித்துள்ளது. எம்.டியின் குரலில் தகழியின் வாழ்வு விவரிக்கபடுகிறது. தகழியின் எழுத்தும் வாழ்வும் பற்றியதாக மட்டுமின்றி அன்றைய கேரளத்தின் சமூக நிலை, கல்வி பயிலும் முறைகள், பத்திரிக்கைகள், நீதிமன்றம். வழக்கறிஞர் வேலை என நூற்றாண்டின் சித்திரம் அழகாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

கனவைத் துரத்தியவர்.

லெஃப்டர்: தி ஸ்டோரி ஆஃப் தி ஆர்டினேரியஸ் 2025 ல் வெளியான துருக்கி நாட்டுத் திரைப்படம். இப்படத்தை கேன் உல்கே இயக்கியுள்ளார். எர்டெம் கெய்னார்கா லெஃப்டராக நடித்துள்ளார். புகழ்பெற்ற துருக்கி கால்பந்தாட்ட வீரர் லெஃப்டரின் வாழ்க்கை வரலாற்றை படம் விவரிக்கிறது. கிரேக்க குடும்பத்தில் பிறந்த லெஃப்டர் துருக்கி அணிக்காக விளையாடி பெரும்சாதனைகளைச் செய்திருக்கிறார். லெஃப்டரின் வாழ்வின் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளைப் படம் உண்மையாகப் பதிவு செய்துள்ளது. ஏதென்ஸில் கிரேக்கத்திற்கு எதிராகத் துருக்கி அணியில் அவர் விளையாடும் போது …

கனவைத் துரத்தியவர். Read More »