திரைக்கு முன்னால்.
புதிய சிறுகதை. ஏப்ரல் 13. 2026 அந்தப் பெண்கள் இருவரும் கையில் கோன்ஐஸ்கிரீம் வைத்திருந்தார்கள்.. ஆர்கேஎஸ் தியேட்டரில் கோன் ஐஸ்கிரீம் மிகுந்த சுவையாக இருக்கும். வழக்கமாகச் சபாபதியும் அவனது மனைவி தனசங்கரியும் படம் ஆரம்பிக்கும் முன்பாகவே கோன் ஐஸ் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு தான் தியேட்டருக்குள் செல்வார்கள். அன்றைக்கு அவர்கள் டைட்டானிக் படத்தினைக் காணுவதற்காக வந்திருந்தார்கள். கோன்ஐஸை நோக்கித் தனது நாக்கை நீட்டிய ஆரஞ்சு வண்ண சுடிதார் அணிந்த பெண்ணிற்கு முப்பத்தைந்து வயதிருக்கக் கூடும். அருகில் நின்றவளின் வயது …
