ரெம்ப்ராண்டின் மன்னர்
ஓவியர் ரெம்ப்ராண்டினைப் பற்றிய கறுப்பு வெள்ளைத் திரைப்படத்தில் அவரது ஓவிய உலகை விடவும் வறுமையான வாழ்க்கையே அதிகம் சித்தரிக்கபட்டுள்ளது. இன்று ரெம்ப்ராண்டின் ஓவியங்கள் பலநூறு கோடி மதிப்பில் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் 17 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஆம்ஸ்டர்டாமில் வாழ்ந்த போது கடனைக் கட்ட முடியாமல் அவர் திவாலாகியிருக்கிறார். ஓவியம் வரைவதற்கான வண்ணங்கள் வாங்குவதற்குக் கூட வருவாய் இல்லாதவராக வாழ்ந்திருக்கிறார். ரெம்ப்ராண்டின் சுய உருவப்படங்களைக் காணும் போது அவரது ஆளுமையின் தனித்துவம் நன்றாக வெளிப்படுகிறது. குறிப்பாக ரெம்ப்ராண்டின் …
