ஆட்டுப்பூனை
ஃபிரான்ஸ் காஃப்கா தனது குறுங்கதை ஒன்றில் விசித்திரமான விலங்கு ஒன்றைப் பற்றிக் குறிப்பிடுகிறார். A Crossbreed என்ற கதையில் வரும் விலங்கு பூனையின் தலையும் ஆட்டுக்குட்டியின் உடலும் கொண்டிருக்கிறது. ஆட்டுப்பூனை என்று அதனைக் குறிப்பிடலாமா. இந்த விலங்கு அவரது தந்தையிடமிருந்து பராம்பரியமாகக் கிடைத்ததாகக் காஃப்கா குறிப்பிடுகிறார். ஆட்டுக்குட்டியைப் போல உடல் கொண்டிருந்தாலும் அது ஆட்டுக்குட்டி போல நடந்து கொள்ளவில்லை. அது போலவே பூனையின் தலை கொண்டிருந்தாலும் எலியைத் துரத்தவில்லை. சில நேரம் ஆடு போல அங்குமிங்கும் ஒடுகிறது. …
