இரண்டு ரகசியங்கள்
ஆண்வேஷமிட்ட பெண்ணின் கதை ஷேக்ஸ்பியர் நாடக காலம் தொட்டேயிருந்து வருகிறது. ஆல்பர்ட் நோப்ஸ் திரைப்படத்தின் கதையும் அதுவே ஆல்பர்ட் நோப்ஸ், அயர்லாந்தின் டப்ளின் நகரிலுள்ள மாரிசன் ஹோட்டலில் பணிபுரியும் ஒரு ஆங்கிலேய பட்லர் . பெண்ணாகப் பிறந்த அவர் முப்பது ஆண்டுகளாக ஒரு ஆணாகவே வாழ்ந்து வருகிறார். யாருக்கும் அவரது அடையாளம் தெரியவில்லை. ஹோட்டலில் வண்ணம் பூசும் பணியில் இருக்கும் ஹூபர்ட் பேஜ், ஆல்பர்ட்டின் ரகசியத்தைக் கண்டுபிடிக்கிறான். பெண்ணாக இருந்த ஆல்பர்ட், தனது 14 வயதில் பாலியல் …
