Day: October 21, 2026

2026- புதிய புத்தகங்கள்

நீரறியா அன்னங்கள் 2026 டிசம்பர் 25 மாலை சென்னையில் எனது புதிய நூல்களின் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. இதில் எனது புதிய சிறுகதைகளின் தொகுப்பான நீரறியா அன்னங்கள் வெளியாகிறது. இந்தத் தொகுப்பிலுள்ள சிறுகதைகள் எனது இணைய தளத்திலும். இதழ்களிலும் வெளியானவை. சில கதைகள் ஆங்கிலம், தெலுங்கு, மற்றும் மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளன. முந்நூறு பக்கங்களுக்கும் மேலான பெரிய சிறுகதைத் தொகுப்பு. தற்போது புத்தக உருவாக்கப்பணிகள் நடைபெற்று வருகின்றன. •• மார்க்வெஸின் சேவற்சண்டை சர்வதேச இலக்கியம் மற்றும் …

2026- புதிய புத்தகங்கள் Read More »

The Colonel’s Chair Bearer

எனது குறுங்கதைகளின் தொகுப்பான கர்னலின் நாற்காலி ஆங்கிலத்தில் வெளியாகிறது. இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் டாக்டர் சந்திரமௌலி. கர்னலின் நாற்காலி தொகுப்பிலுள்ள சில குறுங்கதைகள் மலையாளத்தில் வெளியாகியுள்ளன. ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு பிரண்ட்லைன் இதழிலும் மூன்று குறுங்கதைகள் வெளியாகியிருந்தன.