எனது இந்தியா வெளியீடு

ஜுனியர் விகடன் இதழில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நான் எழுதிவரும் தொடரான எனது இந்தியாவின் முதல் நூறு கட்டுரைகள் ஒரு தொகுதியாக விகடன் பிரசுரத்தால் நேற்று வெளியிடப்பட்டுள்ளது,

மிகச்சிறப்பான வடிவமைப்பு, நேர்த்தியான புகைப்படங்கள், ஆர்ட் பேப்பர் , 485 பக்கங்கள் கொண்ட இந்த நூலின் விலை ரூ355.

புத்தகத் தயாரிப்பில் மிகுந்த ஈடுபாடு காட்டிய விகடன் பிரசுரத்தைச் சேர்ந்த ஆசிரியர் இரா.சரவணன், முதன்மை வடிவமைப்பாளர் ராம்குமார், முதன்மை உதவி ஆசிரியர் அன்பழகன், மற்றும் விற்பனை பிரிவு பொறுப்பாளர் அப்பாஸ், ஆகியோருக்கும்,  ஜுனியர் விகடன் இதழில்  இந்தத் தொடர் வெளிவரக்காரணமாக இருந்த பதிப்பாளர் திரு. சீனிவாசன் அவர்களுக்கும், விகடன் குழுமத்தின் ஆசிரியர் அசோகன், கண்ணன், மற்றும் திருமாவேலன் ஆகியோருக்கும் எனது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்

இந்த தொடரில் தொடர்ந்து என்னோடு  ஒத்துழைப்பு செய்துவரும் நண்பர் கோபி எனும் கோபாலகிருஷ்ணனுக்கு விசேசமான நன்றி

தொடர்ந்து எனது இந்தியாவை வாசித்து, பாராட்டி வரும் வாசகர்கள் அனைவருக்கும் இத்தருணத்தில்

எனது உள்ளம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது இந்தியா புத்தகத்தின் அறிமுகவிழா கோவையில் விரைவில் நடக்க உள்ளது,

இடம் மற்றும் நாள் குறித்து விரைவில் தெரியப்படுத்துகிறேன்

0Shares
0