கால்முளைத்த ஆசை

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக இயக்குனர் பாலசந்தரின் தயாரிப்பில் நான் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குனர் சொர்ணவேல் இயக்கிய கால்முளைத்த ஆசை என்ற தொலைக்காட்சி குறுந்தொடர் வெளியானது,  திங்கள் முதல் வெள்ளிவரை ஒரு வார காலம் இந்த ஒரு கதை ஒளிபரப்பபட்டது, இதனை அப்படியே தனி ஒரு டெலிவிஷன் திரைப்படமாக வெளியிடுவது என்ற முனைப்புடன் இது உருவாக்கபட்டது.

அதன் காணொளி பிரதிகள் எதுவும் என் வசமில்லை,  தற்போது எழுத்தாளரும் நடிகருமான பாரதி மணி அவர்களால் இத்தொடர் மூன்று பகுதிகளாக யூடியூப்பில் இணைக்கப்பட்டுள்ளது

இயக்குனர் சொர்ணவேல் பூனே திரைப்படக்கல்லூரியில் பயின்றவர், தற்போது அமெரிக்காவில் சினிமா மற்றும் இலக்கியம் கற்பிக்கும் பேராசிரியராகவும் ஆவணப்பட இயக்குனராகவும் உள்ளார்,

பாலச்சந்தர் அவர்களின் மகன் பால.கைலாசம் எனது மிகச்சிறந்த நண்பர், அவரது மின்பிம்பங்கள் நிறுவனத்துடன் இணைந்து நிறைய வேலைகள் செய்திருக்கிறேன், அவரது அன்பான தோழமை என்றும் மறக்கமுடியாதது. அந்த இனிய நாட்களின் நினைவுகள் இந்தத் தொடரைக்காண்கையில் மனதைப் பசுமையாக்குகிறது

இந்த தொடரில் பாரதி மணி அவர்கள் சிறப்பாக நடித்திருக்கிறார், இத்தொடர் முழுவதும் காரைக்குடியில் படமாக்கபட்டது, சிறப்பாக இதன் ஒளிப்பதிவினை செய்தவர் சேவிலோ ராஜா,

இந்தத் தொடரைப்போலவே இயக்குனர் நாகா, ராஜேந்திரகுமார், சஷிகாந்த், ஆகியோருடன் இணைந்து தொலைக்காட்சி குறுந்தொடரில் வேலை செய்திருக்கிறேன்,

இன்று இணையத்தில் தனியிடம் பிடித்துள்ள நண்பர் உண்மைதமிழன் (சரவணன்) அன்று எங்களுடன் இணைந்து பணியாற்றியவர், இன்று அவர் தொலைக்காட்சி செய்தியாளராகச் சிறப்பாகச் செயல்படுவது சந்தோஷம் அளிக்கிறது

Kaal Mulaitha Aasai Part I. S. Ramakrishnan.Bharati Mani.3gp

part 1

https://youtu.be/R9jSototSao

part 2


https://youtu.be/Y67NWNVaQyA

Part III.


https://youtu.be/hXMCpiVOEBA

****

0Shares
0