காஃப்கா எழுதாத கடிதம்

காஃப்கா எழுதாத கடிதம் என்ற எனது கட்டுரைகளின் தொகுப்பு ஆகஸ்ட் 30 மாலை ஆறுமணிக்கு மதுரை தமுக்கம் மைதானம் எதிரில் உள்ள நார்த்கேட் ஹோட்டலில் வெளியிடப்படவுள்ளது.

உயிர்மை பதிப்பகம் இந்த நூலை வெளியிடுகிறது.

காஃப்கா எழுதாத கடிதம் கட்டுரைத்தொகுப்பில் 28 கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன.

காஃப்கா, வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ், ழான் காக்தூ, கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், ஹெர்மென் மெல்வில், தோரோ, ஹெர்மன் ஹெஸ்ஸே, ஸ்டீபன் ஜ்ஸ்வேய்க், மிரோஜெக், ரேமண்ட் கார்வர், விளாதிமிர் மெக்ரே ,வியோலெட் லெடுக், செல்மா லாகர்லெவ். போன்ற இலக்கிய ஆளுமைகள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு

இதில் நான்கு கட்டுரைகள் அச்சில் வெளிவராதவை. கடந்த இரண்டு ஆண்டுகளில் நான் எழுதிய கட்டுரைகள் இவை.

0Shares
0