ஆகஸ்ட் 30 சனிக்கிழமை மாலை ஆறுமணிக்கு மதுரை தமுக்கம் மைதானம் எதிரில் உள்ள நார்த்கேட் ஹோட்டலில் எனது புதிய சிறுகதை தொகுதி வெளியிடப்படவுள்ளது.
உயிர்மை பதிப்பகம் இந்த நூலை வெளியிடுகிறது.
நீரிலும் நடக்கலாம் என்ற இந்தச் சிறுகதைத்தொகுப்பில் பதினைந்து கதைகள் இடம்பெற்றிருக்கின்றன.
1. ஆண் மழை
2. கற்பனைச் சேவல்
3. நீரிலும் நடக்கலாம்.
4. அவளது வீடு
5. செகாவின் விருந்தாளி
6. தனலட்சுமியின் துப்பாக்கி
7. பதினாறு டயரிகள்
8. எம்பாவாய்
9. ஒரு பல் போதும்
10. வானோர்
11. வெறும் இருட்டு
12. காப்காவிற்குச் செண்பகவள்ளியைத் தெரியாது
13. ரயில் நிலையத்தில் ஒருவன்
14. இரண்டாவது புலி
15. இன்னும் சில கிளிகள்
இதில் ஐந்து சிறுகதைகள் அச்சில் வெளிவராதவை. கடந்த இரண்டு ஆண்டுகளில் நான் எழுதிய சிறுகதைகள் இவை.