அருவியால் முடியாதது
புதிய சிறுகதை. ஜுலை 1 2026 சேர்மக்கனி தனது வீட்டிலிருந்த நாய்களின் மீது பொறாமை கொண்டிருந்தான். அவற்றைப் பராமரிப்பதற்காகத் தனது சம்பளத்தை விடவும் முதலாளி அதிகம் செலவு செய்கிறாரே என்ற பொறாமையும், நாய்களுக்குக் கிடைப்பது போல அன்றாடம் கறிச்சோறு தனக்குக் கிடைப்பதில்லையே என்ற கோபமும் அவனுக்கிருந்தது. அந்தப் பங்களா குற்றாலத்திலிருந்தது. நேஷனல் மில் முதலாளியான காசிநாதன் கட்டிய பங்களா . ஆறாயிரம் சதுர அடி கொண்ட வீடு. சீசன் துவங்கியதும் காசிநாதன் குடும்பத்தினர் ஒரு மாத காலம் …
