விளக்கு விருது

எழுத்தாளரும், சிறந்த மொழிபெயர்ப்பாளரும், விமர்சகருமான சி.மோகனுக்கு இவ்வாண்டிற்கான விளக்கு விருது அளிக்கப்படுகிறது.

பா.சிங்காரம். சம்பத், ஜீ. நாகராஜன் போன்ற இலக்கிய ஆளுமைகள் குறித்த மோகனின் கட்டுரைகள் மிக முக்கியமானவை.  இந்த ஆளுமைகள் குறித்துத் தமிழ் இலக்கியம் கவனம் கொள்ள இக்கட்டுரைகளே முக்கியக் காரணமாக அமைந்தன.

அவரது மொழிபெயர்ப்பில் வெளியான ஒநாய் குலசின்னம் மிக முக்கியமான படைப்பு.

விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம் ஒவியர் ராமானுஜத்தின் வாழ்வை மையமாகக் கொண்ட சிறந்த நாவல்

நடைவெளிக் குறிப்புகள், காலம்,கலை,கலைஞன்  இவரது கட்டுரைகளின் தொகுப்புகள்.

பன்முக ஆளுமையான சி. மோகனுக்கு இந்த விருது அளிக்கபடுவது மிகுந்த சந்தோஷம் அளிக்கிறது.

அவருக்கு எனது மனம் நிரம்பிய வாழ்த்துகள்

0Shares
0