புத்தகக் கண்காட்சி இரண்டாம் நாள்
தேசாந்திரி அரங்கு எண் 220, 221ல் இன்று நிறைய வாசகர்களைச் சந்தித்து உரையாடினேன். அமெரிக்காவிலிருந்து வந்திருந்த நம்பி நாராயணன் அவர்களைச் சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சி தந்தது. புத்தகக் கண்காட்சிக்குள் வாகனத்தில் போய் வருவது ராணுவ முகாம் ஒன்றுக்குள் போய் வருவது போல அத்தனை கஷ்டமாக உள்ளது. எத்தனை தடுப்புகள். எவ்வளவு கெடுபிடிகள். குழந்தைகள் பெரியவர்களை அலையவிடுகிறார்கள். இத்தனை மோசமான வாகன வழித்தடைகள் இதன் முன்பு கண்டதேயில்லை. அதிலும் பாதுகாப்பு பணியில் நியமிக்கபட்டுள்ளவர்கள் பார்வையாளர்களை நடத்துகிற விதம் அராஜகம். …