நீலக்குதிரைகளின் மௌனம்.
ஃபிரான்ஸ் மார்க் வரைந்த புகழ்பெற்ற ஓவியமான Blue Horses பற்றி மேரி ஆலிவர் ஒரு கவிதை எழுதியிருக்கிறார். அதில் அந்த ஒவியத்தினுள் செல்லும் அவரை நீலக்குதிரைகள் நெருங்கி வருகின்றன. தாங்கள் அறிந்த ஏதோ ரகசியத்தைச் சொல்ல முயல்வது போலக் காட்சியளிக்கின்றன. ஆனால் எதையும் சொல்லவில்லை என கவிதை முடிவு பெறுகிறது. உலகில் இன்னும் கருணை மீதமிருக்கிறது என்பதன் அடையாளம் போலவே இந்த நீலக்குதிரைகள் வரையப்பட்டிருப்பதாக ஆலிவர் கருதுகிறார். இந்த ஓவியத்தைக் காணும்போதெல்லாம் டால்ஸ்டாயின் நடனத்திற்குப் பிறகு என்ற …









