சினிமா

பூமாவின் கண்கள்

பூமா (PUMA) எனப்படும் மலைச்சிங்கத்தைப் பற்றிய Into the Puma Triangle டாமெண்டரியைப் பார்த்தேன். மலைச்சிங்கங்கள் மிகச் சக்திவாய்ந்த உடலமைப்பு கொண்டவை. மான்களை வேட்டையாடுவதில் திறமையானவை. சிலே நாட்டில் பூமாக்கள் முறையாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. வனவிலங்குகளை ஆய்வு செய்து ஆவணப்படுத்தி வரும் கேசி ஆண்டர்சன் மோன்டானாவில் பல ஆண்டுகளாகப் பூமாக்களைக் கண்காணித்து வருகிறார், ஆனால் அவரால் ஒருமுறை கூடப் பக்கத்தில் போய் பூமாவைக் காண முடிந்ததில்லை . ஆவணப்படத் தயாரிப்பாளர் ரெனே அழைப்பில் சிலே செல்லும் கேசி …

பூமாவின் கண்கள் Read More »

எமிலி டிக்கின்சனின் காதல்

கவிஞர் எமிலி டிக்கின்சன் வாழ்க்கை வரலாற்றினை விவரிக்கும் Wild Nights with Emily என்ற படத்தைப் பார்த்தேன். மேடலின் ஓல்னெக் என்ற பெண் இயக்குநர் இயக்கிய படமிது A Quiet Passion என்ற ஒரு திரைப்படமும் எமிலியின் சுயசரிதையை மையமாகக் கொண்டதே. இரண்டிலும் அறியப்படாத எமிலியின் ரகசியக் காதலே முதன்மையாகப் பேசப்படுகிறது. தனது இருபதாம் பிறந்தநாளுக்கு நான்கு மாதங்களுக்கு முன்னர், எமிலி டிக்கின்சன் முதன் முறையாகச் சூசன் கில்பர்ட்டை சந்தித்தார். சூசன் அவளை விட ஒன்பது நாட்கள் …

எமிலி டிக்கின்சனின் காதல் Read More »

ஹெமிங்வேயின் நண்பர்

எழுத்தாளர் எர்னஸ்ட் ஹெமிங்வேயிற்கும் பிரபல ஹாலிவுட் நடிகர் கேரி கூப்பருக்குமான நட்பை விவரிக்கும் Cooper & Hemingway: The True Gen என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன். 2013 ஆம் ஆண்டு வெளியான இந்த ஆவணப்படம், அவர்களின் இருபது ஆண்டுகால நட்பை ஆராய்கிறது. கேரி கூப்பர் மற்றும் எர்னஸ்ட் ஹெமிங்வே இருவரும் அமெரிக்காவின் புகழ்பெற்ற நட்சத்திரங்கள். இரண்டு பேருக்கும் நிறைய ஒற்றுமைகள். ஒரே உயரம். ஹெமிங்வே கூப்பரை விடப் பத்து மாதம் மூத்தவர். வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் கூப்பர். …

ஹெமிங்வேயின் நண்பர் Read More »

மோலியரின் காதல்

புகழ்பெற்ற பிரெஞ்சு நாடக ஆசிரியரான மோலியரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் திரைப்படத்தைப் பார்த்தேன். லாரன்ட் டிரார்ட் இயக்கியுள்ளார் 1658 ஆம் ஆண்டில் கதை நடக்கிறது பகடி நாடகங்களுக்குப் பிரபலமான மோலியர் அதை விடுத்து துன்பவியல் நாடகம் ஒன்றை நிகழ்த்த விரும்புகிறார். அவரது குழுவினர்கள் அதை விரும்புவதில்லை. மன்னரின் ஆதரவுடன் மோலியர் நாடகங்களை நிகழ்த்துகிறார். மன்னருக்கோ நகைச்சுவை நாடகங்கள் மட்டுமே பிடிக்கிறது. ஆகவே கட்டாயத்தின் பெயரில் நகைச்சுவை நாடகம் போட வேண்டிய நெருக்கடி உருவாகிறது. இந்தச் சூழலில் அவரது …

மோலியரின் காதல் Read More »

இன்னொரு விசாரணை

1961ல் வெளியான Judgment at Nuremberg என்ற திரைப்படம் யூத இனப்படுகொலை குறித்த நீதிமன்ற விசாரணையை முதன்மைப்படுத்தியது. மிகச்சிறந்த படம். ஹிட்லர் செய்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்த யாரையெல்லாம் தண்டிப்பது என்ற கேள்வியைப் படம் எழுப்புகிறது. இதில் ஒரு இளம் வழக்கறிஞர் இனப்படுகொலை என்பது ஒரு மாயை. திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு பொய். புகைப்படங்கள். சாட்சியங்கள் சொல்வது உண்மையில்லை. எங்கேயிருக்கிறது ஹிட்லரின் உத்தரவு. கேஸ் சேம்பர் பற்றிய செய்திகள் யாவும் கட்டுக்கதை என்று வாதிடுவார். இனப்படுகொலையின் சாட்சியங்கள் …

இன்னொரு விசாரணை Read More »

எரிமலையின் முன்னால்.

ஸ்ட்ரோம்போலி 1950ல் வெளியான திரைப்படம். ராபர்டோ ரோசோலினி இயக்கியது. இத்தாலிய நியோ ரியலிச சினிமாவில் குறிப்பிடத்தக்கது. இங்க்ரிட் பெர்க்மென் நடித்துள்ள இந்தப்படம் இரண்டாம் உலகப்போருக்கு பிறகான காலகட்டத்தில் நடக்கிறது. லிதுவேனிய அகதியான கரீன் இத்தாலிய அகதி முகாம் ஒன்றில் வசிக்கிறாள். முகாம் வாழ்க்கையிலிருந்து தப்பிச்செல்வதற்காக முகாமின் காவலராக உள்ள ராணுவ வீரனான அன்டோனியோவைத் திருமணம் செய்து கொள்கிறாள். அன்டோனியோவின் பின்புலம் எதுவும் அறியாமலே அவனைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதிக்கிறாள். அவனும் அவளது நிகரற்ற அழகில் மயங்கி …

எரிமலையின் முன்னால். Read More »

இருபத்திநான்கு கண்கள்.

1954ல் வெளியான அகிரா குரசேவாவின் செவன் சாமுராய் படத்தோடு போட்டியிட்டு பல்வேறு திரைப்படவிழாக்களில் விருதுகளை வென்ற திரைப்படம் Twenty-four Eyes. கினோஷிதா இயக்கியது. பெண் எழுத்தாளர் சாகே சுபோய் எழுதிய நாவலினை மையமாக் கொண்டு படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஜப்பானிய சினிமா என்றாலே சாமுராய் படங்கள் என்ற பொதுப்புத்தியிலிருந்து முற்றிலும் மாறுபட்டபடமிது. ஓசுவின் திரைப்படங்கள் ஜப்பானின் ஆன்மாவை பிரதிபலிப்பதாக இருந்தன. அது போலவே கினோஷிதா இயக்கிய படங்களும் இலக்கியப்பிரதிகளின் ஒப்பற்ற திரைப்படைப்பாக விளங்குகின்றன ஆசிரியருக்கும் மாணவர்களுக்குமான உறவு பற்றிய …

இருபத்திநான்கு கண்கள். Read More »

மேய்ச்சல் மனிதர்கள்.

ஜின்ஜியாங் பிராந்தியத்தில் வாழும் கசாக் இன மக்களின் மாறிவரும் வாழ்க்கையை மையமாகக் கொண்ட திரைப்படம் Fade Away Pastoral. ஹதிஷா மற்றும் ஹுமார் குடும்பங்களின் கதையைச் சொல்கிறது. ஹுமார் மேய்ச்சலுக்குச் செல்பவர்களின் வழிகாட்டியாக விளங்குகிறார். கசாக்குகள் செம்மறி ஆடுகள், குதிரைகள் மற்றும் ஒட்டகங்களின் மந்தைகளை ஒரு இடம் விட்டு மற்றொரு இடம் மேய்ச்சலுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டவர்கள். பனிப்பிரதேசத்தில் அவர்கள் மந்தைகளுடன் செல்லும் காட்சிகள் படத்தில் பிரமிப்பூட்டுகின்றன. மிகச்சிறந்த ஒளிப்பதிவு. கடும்பனிப்புயலில் மந்தையோடு அவர்கள் சிக்கிக் கொள்வதில் …

மேய்ச்சல் மனிதர்கள். Read More »

காதலின் நிழல்.

காஸபிளங்கா படத்தை இருபது முறைகளுக்கும் மேலாகப் பார்த்திருக்கிறேன். மைக்கேல் கர்டிஸ் இயக்கி 1942 ஆம் ஆண்டு வெளியான இந்தப்படத்தில், ஹம்ப்ரி போகார்ட், இங்க்ரிட் பெர்க்மேன் மற்றும் பால் ஹென்ரிட் ஆகியோர் நடித்துள்ளனர்.நேற்றிரவு திரும்பும் காஸபிளாங்கா பார்த்தேன். பழைய போட்டோ ஆல்பங்களைத் திரும்பப் பார்க்கும் போது ஏற்படும் கிளர்ச்சியும் சந்தோஷமும் தரும் அனுபவமது. பிரிந்த தனது காதலியை மறுபடியும் சந்திக்கும் ஒருவனின் கதை சினிமாவில் என்றும் அழியாதது. அதுவும் காதலி உதவி கேட்டு நிற்கும் சூழலும் அவளுக்காகக் காதலன் …

காதலின் நிழல். Read More »

வடக்கன் வீரகதா

ஒரு வடக்கன் வீரகதா படம் பார்த்தேன். முன்னதாக நான்கு முறை பார்த்திருந்த போதும் படம் சுவாரஸ்யமாகவே இருந்தது. சில படங்கள் காலத்தை வென்று ஒளிரக்கூடியவை. அதில் ஒன்று ஒரு வடக்கன் வீர கதா. கதை 16 ஆம் நூற்றாண்டின் வடக்குக் கேரளாவில் நடக்கிறது. சதியன் சந்து என்று அறியப்படும் சந்துவின் மீது புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சி அவன் தரப்பு நியாயங்கள் எம்.டி.வாசுதேவன் நாயர் மிக அழகாகச் சித்தரித்திருக்கிறார். வரலாற்றில் ஒருவன் துரோகியாகச் சித்தரிக்கப்படுவதற்கு இப்படியும் காரணமிருக்கலாம் என்பது …

வடக்கன் வீரகதா Read More »