சினிமா

அம்பு துளைக்கப்பட்ட மான்

புகழ்பெற்ற ஓவியரான ஃபிரைடா காலோ வாழ்க்கையை விவரிக்கும் புதிய ஆவணப்படம் வெளியாகியுள்ளது. ஃபிரைடாவின் டயரி மற்றும் கடிதங்களைப் பயன்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஃபிரைடாவின் ஓவியங்கள் திரையில் உயிர்பெற்று இயங்குவது அழகானது. அனிமேஷன் மற்றும் ஆவணக்காட்சிகள் மூலம் ஃபிரைடா வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகள் சித்தரிக்கப்படுகின்றன. இதற்கு முன்னதாகச் சல்மா ஹாயக் நடித்த ஃப்ரைடா திரைப்படம் 2002 ஆம் ஆண்டு ஜூலி டெய்மரால் இயக்கப்பட்டு வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்த ஆவணப் படம் அதிலிருந்து நிறைய வேறுபடுகிறது. …

அம்பு துளைக்கப்பட்ட மான் Read More »

உலகின் சமநிலை

அனிமேஷன் திரைப்படங்கள் நமக்கு வியப்பூட்டும் மாற்று உலகை அறிமுகம் செய்கின்றன. அந்த உலகம் விசித்திரமானது. அற்புதங்களால் நிரம்பியது. நம் அன்றாடத்தைப் போலவே அங்கும் ஒரு அன்றாட வாழ்க்கையிருக்கிறது. ஆனால் அந்த வாழ்க்கை மனிதர்களை மட்டுமே மையப்படுத்தியதில்லை. ஒரு முயலின், நாரையின், மீனின் பார்வையில் உலகைக் காணுவது வியப்பானது. குழந்தைகளே அப்படிக் கற்பனை செய்கிறார்கள். ஆலீஸின் அற்புத உலகம் நாவலில் முயலைத் துரத்திக் கொண்டு செல்லும் ஆலீஸ் புதிய உலகைக் கண்டறிகிறாள். அந்த உலகின் முட்டாள்தனங்களும் அபத்தங்களும் அவளை …

உலகின் சமநிலை Read More »

தந்தையின் காதலி

ஜப்பானிய எழுத்தாளர் சுடோமு மிசுகாமியின் நாவலை மையமாகக் கொண்டு 1963ல் உருவாக்கபட்ட திரைப்படம் Bamboo Doll of Echizen. மூங்கில் பொம்மைகள் செய்யும் இளைஞனின் வாழ்க்கையை விவரிக்கிறது. ஜப்பானிய கறுப்பு வெள்ளைப்படங்கள் தனித்துவமான அழகியலைக் கொண்டிருக்கின்றன. மாறுபட்ட கதைகள். மறக்க முடியாத கதாபாத்திரங்கள். உணர்ச்சிப்பூர்வமான திரைமொழி, நேர்த்தியான இசை, மற்றும் கச்சிதமான படத்தொகுப்பு என ஜப்பானிய சினிமா அதற்கான கலைநேர்த்தியைக் கொண்டிருக்கிறது. இப் படத்தின் இயக்குநர் கோசாபுரோ யோஷிமுரா. இவர் புகழ்பெற்ற இயக்குநர் யசுஜிரோ ஓசுவின் உதவி …

தந்தையின் காதலி Read More »

பிரிவின் மஞ்சள் நிறம்

ஆயில் பெயிண்டிங் அனிமேஷன் முறையில் உருவாக்கப்பட்ட திரைப்படம் THE PEASANTS. இந்தப் படத்திற்காக 40,000 கையால் வரையப்பட்ட எண்ணெய் ஓவியங்களை உருவாக்கியிருக்கிறார்கள். நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான வ்ளாடிஸ்லா ரெய்மாண்ட் (Władysław Reymont ) நாவலை மையமாகக் கொண்டு படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. படத்தின் இயக்குநர் ஹக் வெல்ச்மேன், ஓவிய மேற்பார்வையாளர் பிஸ்கெர்கா பெட்ரோவிச். ஓவியர் வின்சென்ட் வான்கோவின் வாழ்க்கையைப் பற்றிய Loving Vincent திரைப்படத்தை இயக்கியவர் ஹக் வெல்ச்மேன். அதைவிடவும் சிறப்பாக இப்படத்தினை உருவாக்கியுள்ளார். நடிகர்களைக் கொண்டு …

பிரிவின் மஞ்சள் நிறம் Read More »

துப்பாக்கி ஏந்திய துறவி

2006 இல் பூட்டான் ஜனநாயக நாடாக மாற விரும்பியது. அதுவரை நடைபெற்று வந்த மன்னராட்சி முடிவுக்கு வரவே பொதுத்தேர்தலை நடத்த முடிவு செய்தார்கள். தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மாதிரி தேர்தல் ஒன்று ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்தப் பின்புலத்தில் உருவாக்கப்பட்ட படமே The Monk and the Gun. 2023 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தைப் பாவோ சோய்னிங் டோர்ஜி இயக்கியுள்ளார். இப்படம் சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருதிற்குப் போட்டியிட்டது கதை மூன்று சரடுகளைக் கொண்டிருக்கிறது. …

துப்பாக்கி ஏந்திய துறவி Read More »

அரசனின் தனிமை

நிக்கோலஸ் அண்ட் அலெக்ஸாண்ட்ரா திரைப்படம் மூன்று சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கிறது. ஒன்று ரஷ்யாவின் கடைசி ஜார் மன்னர் நிக்கோலஸ் II ன் திருமணம் மற்றும் அரசாட்சியைப் பற்றியது. இரண்டாவது லெனின் ரஷ்யப்புரட்சியை உருவாக்கிய நிகழ்வுகளை விவரிக்கிறது. மூன்றாவது இளவரசனின் நோயை குணப்படுத்துவதாக அரண்மனைக்கு வந்து அலெக்சாண்ட்ராவின் அன்பை பெற்று ரஷ்ய அரசை ஆட்டுவைத்த மதகுரு ரஸ்புடின் பற்றியது. இந்த மூன்று ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்ட சரடுகள். இவை இணைந்து கதைப்பின்னலை உருவாக்குகின்றன. பிரிட்டிஷ் தயாரிப்பில் உருவான படம் …

அரசனின் தனிமை Read More »

நிலத்தின் குரல்

ஒரு கனவைத் துரத்திச் செல்லும் மனிதனின் கதை தான் The Promised Land. பதினெட்டாம் நூற்றாண்டில் நடக்கிறது. Ida Jessen எழுதிய நாவலைத் தழுவி, நிகோலஜ் ஆர்செல் இயக்கியுள்ளார். லுட்விக் கஹ்லெனாகச் சிறப்பாக நடித்திருக்கிறார் மிக்கெல்சென். படத்தின் சில காட்சிகள் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் நட் ஹாம்சன் எழுதிய நிலவளம் நாவலை நினைவூட்டுகிறது. லுட்விக் கஹ்லென் ராணுவத்தில் கேப்டனாகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர், டென்மார்க்கில் மக்கள் வசிக்காத ஜுட்லாந்து நிலப்பகுதியை விவசாய நிலமாக மாற்ற விரும்புகிறார் …

நிலத்தின் குரல் Read More »

மழையின் கறுப்புக் கோடுகள்

மாங்கா என்பது ஜப்பானின் புகழ்பெற்ற சித்திரக்கதை வடிவம். வயது வாரியாக மாங்கா வெளியிடப்படுகிறது. புகழ்பெற்ற மாங்கா நூல்கள் லட்சக்கணக்கில் விற்பனையாகின்றன. ஏன் ஜப்பானியர்கள் சித்திரங்களுடன் படிக்க விரும்புகிறார்கள். அது அவர்களின் பண்பாடு. வாசிப்பின் பிரதான முறை. படக்கதை என்பதை ஆரம்ப வாசிப்பு என்றே இந்தியாவில் நினைக்கிறார்கள். அதனால் பெரியவர்கள் காமிக்ஸ் படிப்பதை ஒவ்வாத விஷயமாக நினைக்கிறார்கள். ஆனால் இப்போது படக்கதை என்பது தனி வகைமையாக உருக்கொண்டதோடு அதற்கான பெரிய சந்தையும் உருவாகியுள்ளது. ஜப்பானில் மாங்கா வரைவதற்கும் எழுதுவதற்கும் …

மழையின் கறுப்புக் கோடுகள் Read More »

என்டோனியின் கனவு

லுசினோ விஸ்காண்டியின் La Terra Trema 1948 ஆம் ஆண்டு வெளியானது. இத்தாலியின் மீனவ கிராமம் ஒன்றின் வாழ்க்கையை யதார்த்தமாக, கலைநேர்த்தியுடன் படமாக்கியிருக்கிறார் விஸ்காண்டி. இப்படம் சிசிலியன் மீனவர்களின் வாழ்க்கையை நிஜமாகச் சித்தரிக்கிறது என்று வெனிஸ் திரைப்படவிழாவில் விருது பெற்றிருக்கிறது. ஜியோவானி வெர்காவின் நாவலை அடிப்படையாகக் கொண்டு படம் உருவாக்கபட்டிருக்கிறது. தொழில்முறை சாராத நடிகர்களைப் பயன்படுத்தியிருக்கிறார் என்பதே படத்தின் பலம்.. மீனவர்கள் கலையாத இருளுக்குள் வலையோடு கடலுக்குச் செல்வது. மீனவ குடும்பத்தின் நெருக்கடிகள். உணவு தயாரிக்கும் விதம். …

என்டோனியின் கனவு Read More »

ஹெர்சாக் சொல்கிறார்

தாமஸ் வான் ஸ்டெய்னேக்கர் இயக்கிய Werner Herzog: Radical Dreamer படத்தின் துவக்கத்தில் தன்னை A good soldier of cinema என ஹெர்சாக் அறிமுகப்படுத்திக் கொள்கிறார். ஆம். போர்வீரனின் துணிச்சலும் தியாகமும் கொண்டவர் தான் வெர்னர் ஹெர்சாக். பதினாறு வயதில் துவங்கிய அவரது சினிமாக் கனவு நிறைய போராட்டங்களையும் தடைகளையும் சந்திக்கச் செய்தது. அவற்றை வெற்றிகரமாக வென்று காட்டி சாதனைகளை நிகழ்த்தியவர் ஹெர்சாக். இன்று சர்வதேச சினிமாவில் அவரது பெயர் ஒரு அடையாளம். நிகரற்ற திரைக்கலைஞராகக் …

ஹெர்சாக் சொல்கிறார் Read More »