அறிவிப்பு

விருதுநகரில்

விருதுநகரில் எனது நண்பரும் தொழில் அதிபருமான அம்பாள் முத்துமணி தனது அம்பாள் ராமசாமி புஷ்பமணி அறக்கட்டளை சார்பில் சிறுகதைப் போட்டி ஒன்றினை நடத்துகிறார் இதன் பரிசளிப்பு விழா அக்டோபர் 6 மாலை விருதுநகர் அம்பாள் ராமசாமி புஷ்பமணி அரங்கில் நடைபெறுகிறது இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பரிசுகளை வழங்குவதுடன் வரலாற்றின் வெளிச்சம் என்ற தலைப்பில் உரையாறறுகிறேன்.

திருச்சி புத்தகத் திருவிழாவில்

திருச்சி நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் அக்டோபர் 4 வெள்ளிக்கிழமை மாலை மகத்தான இந்திய நாவல்கள் என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன். திருச்சி புத்தகத் திருவிழாவில் அரங்கு எண் 26 மற்றும் 27ல் எனது அனைத்து நூல்களும் விற்பனைக்கு கிடைக்கின்றன.

மலேசியப் பயணம்

ஒரு வார கால மலேசியப் பயணம் முடித்து இன்று சென்னை திரும்பினேன். பினாங்கு துவங்கி கூலிம்,  சுங்கைசிப்புட்  ரிஞ்சிங், மலாக்கா என ஐந்து நிகழ்ச்சிகள். கோலாலம்பூரிலிருந்து பினாங்கு வரையான நீண்ட தூரக் கார் பயணம். அதுவும் மழையோடு பயணம் செய்தது மறக்க முடியாத அனுபவம். எல்லா நிகழ்ச்சிகளிலும் அரங்கு நிரம்பிய கூட்டம். எனது மலேசியப் பயணத்தை நண்பர் பி.எம். மூர்த்தி சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்திருந்தார். இவர் மலேசிய கல்வி அமைச்சகத்தின் தேர்வு வாரிய அதிகாரியாகப் பணியாற்றியவர். சிறந்த கல்வியாளர். …

மலேசியப் பயணம் Read More »

ரொட்டியில் எழுதப்பட்ட கவிதை

பிரிட்டிஷ் கவிஞர் வெர்னான் ஸ்கேன்னல் (Vernon Scannell ) ரொட்டியில் கவிதை எழுதும் கவிஞரைப் பற்றி ஒரு கவிதை எழுதியிருக்கிறார். காகிதத்திற்குப் பதிலாக ரொட்டியில் ஒருவர் கவிதை எழுத விரும்புவது மகிழ்ச்சி அளிக்கிறது. அதில் கவிதை உண்ணப்படும் பொருளாக மாறுகிறது.  ரொட்டியில் எழுதுவதற்கான மையாக ஜாமை மாற்றுகிறார் கவிஞர். அதுவும் விரலால் ஜாமைத் தொட்டு ரொட்டி மீது சிறிய கவிதை எழுதுவதாகச் சொல்கிறார். கவிதை எழுதுவது குழந்தை விளையாட்டு போல மாறுகிறது.  ரொட்டி மீது எழுதப்பட்ட கவிதையை …

ரொட்டியில் எழுதப்பட்ட கவிதை Read More »

மலேசியப் பயணம்

செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2 வரை மலேசியப் பயணம் மேற்கொள்கிறேன். பினாங்கு, கடா மற்றும் கோலாலம்பூர் என மூன்று நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விரிவான தகவல்களை விரைவில் பகிருகிறேன்.

Indian Literature இதழில்

எனது சிறுகதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு செப்டம்பர் மாத Indian Literature இதழில் வெளியாகியுள்ளது. இக்கதையை மொழிபெயர்ப்பு செய்திருப்பவர் டாக்டர் சந்திரமௌலி.

மதுரை வருகை

செப்டம்பர் 13 மற்றும் 14 நாட்களில் மதுரை வருவதாகத் திட்டமிட்டிருந்தேன். முக்கியப்பணி ஒன்றின் காரணமாக சென்னையில் இருக்க வேண்டியதால் மதுரை புத்தகக் கண்காட்சிக்கு வர இயலவில்லை. அக்டோபர் 4 வெள்ளிக்கிழமை மாலை திருச்சி புத்தகத் திருவிழாவில் பேசுகிறேன்.

பேனா மருத்துவமனை

கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் பேனா மருத்துவமனை பற்றிய செய்தி ஒன்றை இணையத்தில் கண்டேன். பேனா மருத்துவமனை என்ற கடையின் பெயர் எனக்குப் பிடித்திருந்தது. மைப்பேனாக்களைச் சரி செய்து தரும் இந்தக் கடை 75 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது என்கிறார்கள் முகம்மது இம்தியாஸ் தன்னைப் பேனா மருத்துவர் என்றே அழைத்துக் கொள்கிறார். சிறிய மருத்துவமனையை நடத்தும் மூன்றாம் தலைமுறை மருத்துவர் என்றே தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார். அமெரிக்காவின் லூயிஸ் வாட்டர்மேன் தான் பவுண்டன் பேனாவைக் கண்டுபிடித்தவர். …

பேனா மருத்துவமனை Read More »

போர்ஹெஸின் சித்திரக்கதை

போர்ஹெஸின் வாழ்க்கையை விவரிக்கும் புதிய கிராஃபிக் நாவல் “Borges: The Infinite Labyrinth,” ஸ்பானிஷ் மொழியில் வெளியாகியுள்ளது. இதற்கான ஓவியங்களை வரைந்திருப்பவர் நிக்கோலஸ் காஸ்டெல். கதைவடிவத்தை எழுதியிருப்பவர் ஆஸ்கார் பாண்டோஜோ. போர்ஹெஸின் வாழ்வைப் பத்து சிறிய அத்தியாயங்களில் விவரிக்கிறது இந்தக் கிராபிக் நாவல். இதன் ஆங்கில வடிவம் இன்னமும் வெளியாகவில்லை. இணையத்தில் இதன் சில பக்கங்கள் காணக் கிடைக்கிறது. போர்ஹெஸ் நூற்றாண்டு விழாவின் போது அவரைப் பற்றிய சிறிய அறிமுக நூலை எழுதினேன். அதற்கான புத்தகங்களைத் தேடி …

போர்ஹெஸின் சித்திரக்கதை Read More »

மதுரைப் புத்தகத் திருவிழா

மதுரை தமுக்கம் மைதானத்தின் உள் அரங்கில் வருகின்ற 06.09.2024 முதல் 16.09.2024 வரை புத்தகத் திருவிழா நடைபெறுகிறது இதில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது. எண் 155. எனது அனைத்து நூல்களும் அங்கே கிடைக்கும் செப்டம்பர் 14 சனிக்கிழமை மற்றும் 15 ஞாயிறு இரண்டு நாட்களும் மதுரையில் இருப்பேன். விருப்பமான நண்பர்கள். வாசகர்கள் தேசாந்திரி அரங்கில் என்னைச் சந்திக்கலாம்