கேள்வியின் நிழல்
புதிய சிறுகதை. ஜுலை 2022 கேமிரா ஓடிக்கொண்டிருந்தது. ராம்பிரசாத் கேமிராவைப் பார்க்கவில்லை. ஏதோ யோசனையில் ஆழ்ந்துவிட்டவரைப் போலிருந்தார். கேமிராவின் பின்புறமிருந்து திவ்யா சைகையால் அவரைப் பேசுமாறு சொன்னாள். அவர் அதைக் கவனித்ததாகத் தெரியவில்லை பேராசிரியர் ராம்பிரசாத்திற்குக் கணிதத்திற்கான உயரிய விருது ஒன்றை ஜப்பானிய அரசு அறிவித்திருந்தது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற அந்த விருதைப் பெற்ற முதல் தமிழர் என்பதால் அவரை நேர்காணல் செய்து தொலைக்காட்சியில் ஒளிபரப்ப வேண்டும் என்று நியூவிஷன் சேனல் முடிவு செய்திருந்தார்கள். விருது செய்தி …









