2011 ம் ஆண்டுக்கான இயல் விருது எனக்கு வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது கனடா தேசத்தில் இருந்து வழங்கப்படும் புகழ்பெற்ற சர்வதேசிய இலக்கிய விருதாகும்,
வாழ்நாள் சாதனைக்கான இலக்கிய விருதாக வழங்கப்படுகிறது . 1500 கனேடிய டாலர் பரிசுத்தொகையும் பாராட்டு பத்திரமும் கொண்டது,
இதற்கான விருது வழங்கும்விழா ஜுன் மாதம் கனடாவின் டொரன்டோ நகரில் நடைபெற உள்ளது, அதில் கலந்து கொண்டு விருது பெற இருக்கிறேன்
சுந்தர ராமசாமி, ஜோர்ஜ் எல் ஹார்ட், அம்பை, கோவை ஞானி, ஐராவதம் மகாதேவன்,உள்ளிட்ட பத்து முக்கியப்படைப்பாளிகள் இந்த விருதினை முந்தைய ஆண்டுகளில் பெற்றிருக்கிறார்கள்,
••
இந்த விருதுச் செய்திக்காக எனக்கு வாழ்த்து தெரிவித்த இலக்கிய நண்பர்கள், வாசகர்கள், வலைப்பதிவர்கள், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள், எழுத்தாளர் ஜெயமோகன் உள்ளிட்ட அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்
••
சற்று முன்பு தான் ஒரிசா பயணத்தில் இருந்து சென்னை திரும்பினேன், ஒரிசாவின் ஊடாக ஒருவார காலம் சுற்றியலைந்து பழங்குடி மக்களோடு சேர்ந்து தங்கியிருந்து அவர்களின் வாழ்க்கையை நேரடியாக அறிந்து வந்த அனுபவம் மிகவும் அரியது.
••
ஜனவரி 24 முதல் 30 வரை அடுத்த பயணம், காற்றில் மிதக்கும் இறகு செல்வது போல மனம் விரும்பும் பாதைகளில் சுற்றித் திரிகிறேன்
••