காட்சியாகும் கதை

புத்தாண்டு தினத்தை ஒட்டி சென்னை வானொலி அலைவரிசை ஒன்றில் காட்சியாகும் கதை என்ற தலைப்பில் தமிழ் இலக்கியமும் தமிழ்சினிமாவும் பற்றி ஒரு மணி நேர உரை நிகழ்த்தியிருக்கிறேன்,

இது டிசம்பர் 31 இரவு பத்துமணி முதல் 11 மணி வரை ஒலிபரப்பாகும், இந்த நிகழ்ச்சி மதுரை கோவை திருச்சி நெல்லை உள்ளிட்ட எல்லா வானொலிகளிலும் ஒலிபரப்புச் செய்யப்படும்

இதன் இரண்டாவது பகுதி புத்தாண்டு தினத்தன்று காலை பத்து மணி முதல் பதினோறு மணி வரை சென்னை வானொலி அலைவரிசை ஒன்றிலும், மதுரை கோவை திருச்சி நெல்லை உள்ளிட்ட எல்லா வானொலிகளிலும் ஒலிபரப்புச் செய்யப்படும்

என்னோடு கலந்துரையாடி இந்த நிகழ்வினை சிறப்பாகப் பதிவு செய்திருப்பவர் கோவை வானொலி நிலைய இயக்குனர் ஸ்டாலின், இவர் கிரேக்க நாடகங்களை முழுமையாகத் தமிழில் மொழியாக்கம் செய்துள்ள அற்புதமான மொழிபெயர்ப்பாளர்.

***

0Shares
0