திரைப்படக் கலந்துரையாடல்

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் திரைப்படக் கலந்தாய்வு குழு மாற்றுச்சினிமாவுக்கான கலந்துரையாடல் என்ற தலைப்பில் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிகழ்வின் முதல் திரைப்படமாக பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் 18/9 திரைப்படம் கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

வருகிற 19ம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணியளவில்,சென்னை வடபழனியில் உள்ள திரை இசை கலைஞர்கள் சங்கத்தில் நடக்கவிருக்கும் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில்வழக்கு எண் 18/9திரைப்படத்தில் திரைக்கதை யுக்திகள், படிமங்கள் என்ற தலைப்பில் நான் பேச இருக்கிறேன்

இந்த நிகழ்வில் திரையுலகின் முக்கிய இயக்குனர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார்கள்,

அனைவரும் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பிக்க வேண்டுகிறேன்

•••

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் திரைப்பட கலந்தாய்வு குழு

நடத்தும் மாற்றுச்சினிமாவுக்கான ஒரு கலந்துரையாடல்

முதல் திரைப்படமாக,

சமீபத்தில் திரைக்கு வந்து எல்லோராலும் அதிகம் பாராட்டப்பட்ட

பாலாஜி சக்திவேலின்வழக்கு எண் 18/9

வரவேற்புரை : இயக்குனர் அமீர் அவர்கள்,

தலைமை :   இயக்குனர் கே.பாக்யராஜ் அவர்கள்

சிறப்பு உரை

1.“வழக்கு எண் 18/9” திரைப்படத்தில்  திரைக்கதை யுக்திகள்,படிமங்கள் பற்றி/ எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள்

2.“வழக்கு எண் 18/9” திரைப்படத்தில் பெண்களின் பங்களிப்பு பற்றி /                  

நடிகை ரோஹினி அவர்கள்

3.படத்தின் ஒளிப்பதிவு,படப்பிடிப்பு கோணங்கள், 5D கேமரா உபயோகம் பற்றி/

ஒளிப்பதிவாளர் G .P.கிருஷ்ணா அவர்கள்

4..படத்தின் திரைமொழி பற்றி /

இயக்குனர் வசந்தபாலன் அவர்கள் / இயக்குனர் ராம் அவர்கள்

5.படத்தின் எடிட்டிங் அமைப்பு பற்றி/

தேசிய விருது பெற்ற எடிட்டர் பிரவீன் அவர்கள்

——————–

நிகழ்ச்சித் தொகுப்பாளர் : இயக்குனர் சமுத்திரக்கனி அவர்கள்

நன்றியுரை:இயக்குனர் ஜனநாதன் அவர்கள்

—————————————————————————————————————————-

இடம்: திரைப்பட இசை கலைஞர்கள் சங்கம், வடபழனி, சென்னை

நாள்: 19.5.2012 சனிக்கிழமை

நேரம்: சரியாக மாலை 5 மணி

••••

0Shares
0