Day: May 5, 2024

மனித மனதின் குறியீடு

G. கோபி சிகரெட் பிடிக்கும் குரங்கு சிறுகதை பல நினைவுகளைக் கிளறிவிட்டது. எனது ஊர் கழுகுமலை. அங்குள்ள மலையில் உள்ள குரங்குகள் அங்கு வரும் மனிதர்கள் போடும் திண்பண்ட பொட்டலங்கள், கவர், வாட்டர் கேன், இவற்றை வைத்துக்கொண்டு விளையாடிக் கொண்டிருக்கும். பள்ளி படிக்கும் போது நண்பர்களோடு நான் அடிக்கடி போவேன். அப்போது சில நேரங்களில் அந்தக் குரங்குகள் யாரோ புகைத்து விட்டு போட்ட பீடி தூண்டுகளை எடுத்து பற்ற வைப்பது போலப் பாவனைச் செய்யும். ஆனால் காற்று …

மனித மனதின் குறியீடு Read More »

நன்றி

மழையில் நனைந்த எனது புத்தகங்களுக்கான சிறப்பு விற்பனைக்கு ஆதரவு கரம் நீட்டிய அனைவருக்கும் நன்றி. திரளாக வாசகர்கள் வந்து புத்தகங்களை வாங்கிச் சென்றார்கள். எனது ஆங்கில நூலிற்கான அறிமுகவிழாவும் சிறப்பாக நடைபெற்றது. அபர்ணா கார்த்திகேயன் உரையை முதன்முறையாகக் கேட்கிறேன். அற்புதமாகப் பேசினார். மேனாள் நீதிபதி பிரபாஸ்ரீதேவன் எனது கதைகளின் மொழிபெயர்ப்பு அனுபவங்களை மிகச்சிறப்பாக பகிர்ந்து கொண்டார். அவருக்கு எனது மனம் நிறைந்த நன்றி. எழுத்தாளர் அகரமுதல்வன் ஒருங்கிணைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது. எழுத்தின் நுட்பங்கள் குறித்து அவர் கேட்ட …

நன்றி Read More »