பிரபஞ்சத்தில் மனிதர்கள்
எனது புத்தகங்கள் நாற்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, மொத்தம் 27 மில்லயன் பிரதிகள் விற்பனையாகியுள்ளன என்கிறார்கள். அதனால் என்ன ? அவை அனைத்தும் வேகமாக மறைந்துவிடும், ஏனெனில் புதிய புத்தகங்களின் வெள்ளம் எல்லாவற்றையும் மூழ்கடித்து, முன்பே எழுதப்பட்டவற்றை வேகமாக அடித்துச் செல்கிறது. இன்று ஒரு புத்தகக் கடையில் உள்ள ஒரு புத்தகத்திற்கு, சிறிதளவு தூசி படிவதற்குக் கூட நேரம் கிடைப்பதில்லை. நாம் இப்போது நீண்ட காலம் வாழ்கிறோம் என்பது உண்மைதான் – ஆனால் நம்மைச் சுற்றியுள்ள எல்லாவற்றின் ஆயுட்காலமும் …
