Month: May 2026

சுண்டோகு

புத்தகங்களை வாங்கிக் குவித்துப் படிக்காமலே வைத்திருப்பதைக் குறிக்கும் ஜப்பானியச் சொல் சுண்டோகு (Tsundoku ). வாசிக்கப்படாத புத்தகங்கள். பாதி வாசிக்கபட்டுக் கைவிடப்பட்ட புத்தகங்கள். ஒன்றிரண்டு பக்கங்கள் மட்டுமே புரட்டப்பட்ட புத்தகங்கள். திரும்பத் திரும்ப வாசிக்கபடும் புத்தகங்கள். தேவையில்லாமல் வாங்கிய புத்தகங்கள், மின்புத்தகங்கள், பரிசளிக்கப்பட்ட புத்தகங்கள். நகலெடுக்கபட்ட புத்தகங்கள் என நிறைய வகைகள் இருக்கின்றன. எனது நூலகத்தில் ஒரு புத்தகம் எங்கேயிருக்கிறது எனத் தேட முடியாமல் அதன் இன்னொரு பிரதியை கடையிலிருந்து வாங்கி விடுவேன். தேடிய புத்தகம் அதன் …

சுண்டோகு Read More »

ஹெர்டா முல்லரின் கைக்குட்டை

2009ம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்ற ஹெர்டா முல்லர் தனது நோபல் சொற்பொழிவில் தனது அன்னை கேட்கும் ஒரு கேள்வியைக் குறிப்பிடுகிறார். ஹெர்டா முல்லர் வீட்டைவிட்டு வெளியேசெல்லும் ஒவ்வொரு காலையிலும் வீட்டுவாசலில் நின்று கொண்டு அவரது அம்மா “உன்னிடம் கைக்குட்டை இருக்கிறதா? “ என்ற கேள்வியை எழுப்புவார். ஹெர்டாவிடம் கைக்குட்டை இருக்காது. உடனே வீட்டிற்குள் திரும்பிச் சென்று தனது கைக்குட்டையை எடுத்துக் கொண்டு வெளியே செல்வார். அம்மாவின் இந்த நினைவுறுத்தல் அவரது அன்பின் மறைமுக வெளிப்பாடாகும். …

ஹெர்டா முல்லரின் கைக்குட்டை Read More »

முணுமுணுப்புக் கட்டணம்

புதிய சிறுகதை. மே 10 2026 ராஜாராமன் அந்தப் பாடலை மெதுவாக முணுமுணுத்துக் கொண்டார். சில நாட்களாகவே பழைய சினிமா பாடல் ஒன்றின் வரிகள் மனதில் கொப்பளித்துக் கொண்டிருந்தன. குளிக்கும் போதும், நடைப்பயிற்சியின் போதும், சலூனில் காத்திருக்கும் போதும், பால்கனியிலிருந்தபடி காகங்களை வேடிக்கை பார்க்கும் போதும் அந்தப் பாடலை முணுமுணுத்துக் கொண்டார். அப்படி முணுமுணுக்கும் போது அது யாருக்கும் கேட்டுவிடக் கூடாது என்பதிலும் கவனமாக இருந்தார். தண்ணீரின் மேற்பரப்பிற்கு வரும் மீன்குஞ்சினைப் போல எதற்காக அந்தப் பாடல் …

முணுமுணுப்புக் கட்டணம் Read More »

மீட்சியின் இரவு

ஒரு மழை நாளில் தேவாலயத்தின் வெளியே உள்ள அறிவிப்பு பலகையிலிருந்து துவங்குகிறது ஜான் ஹூஸ்டன் இயக்கிய ‘தி நைட் ஆஃப் தி இகுவானா’ திரைப்படம். பாதிரியார் ஷானான் பிரசங்கத்திற்காகத் தயாராகிறான் பதற்றமான, முகம் மற்றும் தயக்கமான குரல். சபையினை வழிநடத்துவதில் அவனுக்கு ஏதோ பிரச்சனையிருக்கிறது. குடிகாரன் என்று குற்றம்சாட்டப்பட்ட ஷானன் தனது பிரசங்க மேடையில் திடீரென மன உளைச்சலுக்கு ஆளாகி, தனது திருச்சபையினரைத் தேவாலயத்திலிருந்து கோபமாகத் துரத்தும் அதிர்ச்சியான காட்சியுடன் படம் தொடங்குகிறது, இந்நிகழ்வைத் தொடர்ந்து அவன் …

மீட்சியின் இரவு Read More »

புனைவுக்குறிப்புகள் – 1

கார்லோஸ் ஃபுயென்டெஸ் நான் ‘டெர்ரா நோஸ்ட்ரா’ நாவலை எழுதிக்கொண்டிருந்தபோது ஒரு குறிப்பையும் பயன்படுத்தவில்லை. ஆராய்ச்சி எதையும் மேற்கொள்ளவில்லை. காரணம் என்னவென்றால் அந்தக் கதை என் வாழ்நாள் முழுவதும் என்னுடன் சுமந்து வந்த வரலாற்று நினைவுகளால் உருவாக்கப்பட்டது.,. ஒரு மெக்சிகனாக, ஒரு லத்தீன் அமெரிக்கனாக, கரீபியன் படுகை, மெக்சிகோ வளைகுடா, மத்திய தரைக்கடல் பகுதியைச் சேர்ந்த ஒரு மனிதனாக, நான் யாராக இருக்கிறேனோ அத்தனை அம்சங்களும் அதில் உள்ளன. அதனால், நான் ஒருபோதும் ஆய்வு செய்யவேண்டிய அவசியம் ஏற்படவில்லை; …

புனைவுக்குறிப்புகள் – 1 Read More »

இரண்டு உருவப்படங்கள்

எனது அறையிலுள்ள புத்தக அலமாரியில் தஸ்தாயெவ்ஸ்கியின் உருவப்படம் ஒன்றும் ஆன்டன் செகாவின் உருவப்படம் ஒன்றும் அருகருகில் வைக்கப்பட்டுள்ளது. இன்று புத்தகம் எடுக்கும் போது இருவரது புகைப்படங்களையும் பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரெனத் தோணியது அவர்கள் வாழ்நாளில் இவ்வளவு நெருக்கமாக இருந்ததில்லை. அருகில் அமர்ந்ததில்லை. லியோ டால்ஸ்டாயும் ஆன்டன் செகாவும் அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது போன்ற புகைப்படத்தைப் பார்த்திருக்கிறேன்.அதில் தந்தையும் மகனும் போலவே தோற்றம் தருகிறார்கள். செகாவின் மீது டால்ஸ்டாய் பேரன்பு கொண்டிருந்தார். டால்ஸ்டாயின் மகள் மரியா செகாவை …

இரண்டு உருவப்படங்கள் Read More »

ஆசையின் அங்கி

பெண் இயக்குநரான மரியம் டூசானி இயக்கிய The Blue Caftan திரைப்படம் ஒரு இலக்கியப்பிரதியைப் போலவே உருவாக்கப்பட்டிருக்கிறது. மூன்றே முக்கியக் கதாபாத்திரங்கள். அவர்களுக்குள் வளரும் உறவுநிலை மாற்றம். ரகசியங்களை மறைத்துக் கொள்ளும் விதம். உடை தயாரிக்கும் தொழிலின் நுட்பங்கள் எனப் படம் மாறுபட்ட. நிஜமான கதைக்களனை விவரிக்கிறது. ஆடை தைப்பது என்பது படத்தில் குறீயீடாகவே பெரிதும் பயன்படுத்தப்படுகிறது ஒரு தளத்தில் இந்தக் குறியீடு பாலின்பத்தின் அடையாளம். மறுதளத்தில் நுட்பமான மரபுக்கலை வெளிப்பாடு மற்றும் திறமையின் வடிவம். மொராக்கோவில் …

ஆசையின் அங்கி Read More »