Month: May 2026

மறையாத சிரிப்பு

புதிய சிறுகதை. மே 30 2026 காலையிலிருந்தே கையில் அந்த லட்டை வைத்துக் கொண்டு தெருத்தெருவாகச் சுற்றிக் கொண்டிருந்தான் முருகேசன். பனிரெண்டு வயது முடியப்போகிறது என்றாலும் எட்டு வயதுப் பையன் போல மெலிந்த தோற்றம் கொண்டிருந்தான். ஒட்ட வெட்டிய கிராப். அரைக்கால் டவுசர். கட்டம் போட்ட சட்டை. காலில் ரப்பர் செருப்பு. அவன் படித்த பள்ளிக்கூடத்தில் திங்கள் மற்றும் வெள்ளி மட்டுமே யூனிபார்ம் அணிந்துவர வேண்டும். மற்ற நாட்கள் எந்த உடையும் அணிந்து கொள்ளலாம். அன்றைக்குச் சனிக்கிழமை …

மறையாத சிரிப்பு Read More »

மகிழ்ச்சியின் திறவுகோல்.

மசாகி கோபயாஷி இயக்கிய பியூட்டிஃபுல் டேஸ் திரைப்படத்தில் மலர்களை விற்பனை செய்யும் வயதான பெண்ணிற்கும் ஓய்வு பெற்ற தொழிலதிபரான ஷிகாகிக்கும் இடையில் உருவாகும் நட்பு மிக அழகாக விவரிக்கபட்டுள்ளது. ஓசுவின் படங்களை நினைவுபடுத்தும் காட்சிகள் உள்ளன. படத்தின் மையக்கதை இவர்களைச் சுற்றி நடக்கிறது. அவர்கள் மகிழ்ச்சியை உருவாக்கும் திறவுகோல்கள். முதியவர்களான இருவரும் சந்தித்துப் பேசிக் கொள்ளும் காட்சிகள் மிக அழகாக எழுதப்பட்டுள்ளன. ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வதும், மழையில் நனைந்து கொண்டு வரும் முதியவரின் விளையாட்டுதனமான பேச்சு. …

மகிழ்ச்சியின் திறவுகோல். Read More »

வரையப்பட்ட கனிகள்

செசான் வரைந்த ஆப்பிள்களும் ஆரஞ்சு பழங்களும் ஓவியத்தைக் காணும் போது என்ன நடக்கிறது. நாம் காணுவது பழங்களை மட்டுமல்ல. மௌனத்தை. அதுவும் சிவப்பு வண்ண உருவம் கொண்ட மௌனத்தை. உண்ணுவதற்கான பொருள் என்பதிலிருந்து விலகி பழம் அழகான வடிவத்துடன், ஒளிர்தலுடன். அசையாத நிலையில் இருப்பதைக் காண முடிகிறது. ஆப்பிள்களுக்குள் சிறியது பெரியது என வேறுபாடு இருந்தாலும் அவை ஒன்றிணைந்துள்ள விதத்தில் சமநிலை காணப்படுகிறது. மனிதன் உருவாக்கிய குவளையும் இயற்கையின் பரிசான பழங்களைப் போலவே சித்தரிக்கபடுகிறது. குவளைக்கும் பழங்களுக்கும் …

வரையப்பட்ட கனிகள் Read More »

திரும்ப முடியாத பாதை

குற்றவுலகின் கதவுகளைத் தள்ளி ஒருவர் உள்ளே நுழைந்துவிட்டால் அதிலிருந்து மீண்டு வருவது கடினம். கணவன், மகனுடன் ஏழ்மையான வாழ்க்கையை வாழ்ந்து வரும் எத்தேல் வைட்ஹெட் விரும்பி குற்றவுலகிற்குள் அடியெடுத்து வைக்கிறாள். சுழலைப் போல அந்த உலகம் உள்ளே இழுத்துக் கொள்கிறது. தனது வாழ்க்கையைப் பந்தயமாக வைத்துச் சூதாடிய பெண்ணின் கதை என்று The Damned Don’t Cryயைச் சொல்லலாம். Film Noir வகையைச் சார்ந்த படம். ஜோன் க்ராஃபோர்ட் சிறப்பாக நடித்துள்ளார். வின்சென்ட் ஷெர்மன் இதை இயக்கியுள்ளார் …

திரும்ப முடியாத பாதை Read More »

சாய்ந்தாடும் குதிரை மதிப்புரை

இன்றைய இந்து தமிழ்திசை நாளிதழில் எனது சாய்ந்தாடும் குதிரை சிறுகதைத் தொகுப்பிற்கான மதிப்புரை வெளியாகியுள்ளது. தேவதாசன் இதனை எழுதியுள்ளார். நன்றி : தேவதாசன் தி இந்து தமிழ் திசை

காதணிகளின் பயணம்

மாக்ஸ் ஓஃபுல்ஸ் (Max Ophuls) இயக்கிய ‘தி இயர்ரிங்ஸ் ஆஃப் மேடம் டி… திரைப்படம் 1953 ல் வெளியானது. இதன் கதை வியன்னாவில் நடக்கிறது. 1951-ல் வெளியிடப்பட்ட லூயிஸ் டி வில்மோரின் குறுநாவலை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கபட்டிருக்கிறது ஜெனரல் ஆண்ட்ரேயின் மனைவியான லூயிசா தனது சூதாட்டக் கடன்களை அடைப்பதற்காகக் கணவனிற்குத் தெரியாமல் விலை மதிப்புமிக்க வைரக் காதணிகளை ரகசியமாக விற்பனை செய்கிறாள். இந்தக் காதணிகளின் பயணமே படத்தின் மையக்கதை ஆண்ட்ரே தனது மனைவிக்குத் திருமணப் பரிசாக …

காதணிகளின் பயணம் Read More »

புகைப்பட நினைவுகள்

லியோ டால்ஸ்டாயின் வண்ணப்புகைப்படத்தை எடுத்தவர் புகைப்படக்கலைஞர் செர்ஜி ப்ரோகுடின்-கோர்ஸ்கி (Prokudin-Gorsky). தனது வாழ்வில் டால்ஸ்டாய் எடுத்துக் கொண்ட ஒரே வண்ணப்புகைப்படம் இதுவே. ப்ரோகுடின்-கோர்ஸ்கி ஜெர்மனிக்குச் சென்று வண்ணப்புகைப்படக்கலையைக் கற்று வந்தவர். ரஷ்யாவின் வண்ணப்புகைப்படக்கலை முன்னோடியாகக் கொண்டாடப்படுகிறார். டால்ஸ்டாயின் மனைவியான சோபியா புகைப்படக்கலையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அவர் கோடாக் பெல்லோஸ் பிளேட் கேமிரா ஒன்றை விலைக்கு வாங்கித் தனது குடும்பத்தினர் மற்றும் பண்ணை வாழ்க்கையைப் புகைப்படங்கள் எடுத்திருக்கிறார். அவரது நாட்குறிப்பும் புகைப்படங்களும் இணைந்ததாக Song Without Words …

புகைப்பட நினைவுகள் Read More »

வெயில் நிறைந்த மதியம்

ஆல்பெர் காம்யுவின் அந்நியன் நாவல் (L’Étranger ) இதுவரை 75க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த நாவலின் திரைப்பட வடிவத்தை விஸ்காண்டி இயக்கியிருக்கிறார். 1967ல் வெளியான The Stranger திரைப்படத்தில் மார்சலோ மாஸ்ட்ரோயானி கதாநாயகனாக நடித்திருக்கிறார். அந்தப் படத்தைப் பார்த்திருக்கிறேன். நாவலின் அடர்த்தியில்லாத மேலோட்டமாக உருவாக்கபட்ட படம். பெரிய வெற்றியைப் பெறவில்லை. சென்ற ஆண்டு இதே நாவலின் புதிய திரைவடிவம் வெளியாகியுள்ளது. THE STRANGER என்ற இந்த திரைப்படத்தை இயக்கியிருப்பவர் பிரெஞ்சு இயக்குநர் ஃபிரான்சுவா ஓசோன். …

வெயில் நிறைந்த மதியம் Read More »

இன்னொரு பயணம்

புதிய சிறுகதை மே 18 2026 “என்னோட நீம் டூத்பேஸ்டை எடுத்து வச்சிக்கிட்டேன். உன் பேஸ்டை வச்சிட்டயா“ என மனைவியிடம் கேட்டார் தீர்த்தகிரி. “நான் ஹெர்பல் பொடில பல் தேய்க்கிறேன். அதை மாற்ற முடியாது. ஒரு டப்பா எடுத்து வச்சிருக்கேன். போதும்லே“ எனக்கேட்டாள் பவானி. அவர்கள் மும்பையில் உள்ள மகனின் வீட்டிற்குச் செல்வதற்கான பயணத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். ராஜேஷ் பிளைட் டிக்கெட் அனுப்பி வைத்தவுடன் பயணம் போக வேண்டியது தான். அறுபத்தியெட்டு வயதான தீர்த்தகிரி முந்திய நாளே …

இன்னொரு பயணம் Read More »

சிறுகதை / தெலுங்கு மொழிபெயர்ப்பு

எனது நடைத்துணை சிறுகதை தெலுங்கில் மொழியாக்கம் செய்யப்பட்டு உதயினி இதழில் வெளியாகியுள்ளது. இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் அவினேனி பாஸ்கர், இக்கதை நிறையப் பாராட்டுகளைப் பெற்று வருவதாக பாஸ்கர் தெரிவித்தார். அவரது மொழியாக்கத்தில் எனது சிறுகதை தொகுப்பு ஒன்று விரைவில் வெளியாகவுள்ளது. கதையின் இணைப்பு.