Month: July 2026

மழைக்குள் நடக்கும் திருமணம்.

அகிரா குரோசாவாவின் கடைசித் திரைப்படமான ட்ரீம்ஸில் நரியின் திருமண ஊர்வலக் காட்சி இடம்பெற்றுள்ளது. அதனை ஒரு சிறுவன் ரகசியமாக ஒளிந்திருந்து வேடிக்கை பார்க்கிறான். வெயிலும் மழையும் சேர்ந்திருக்கும் பொழுதினை நரிக்குக் கல்யாணம் நடப்பதாகச் சொல்லும் நம்பிக்கை நம்மிடமும் இருக்கிறது. எனது சிறுவயதில் நரிக்கும் காகத்திற்கும் கல்யாணம் நடக்கும் நாளில் இப்படி வெயிலும் மழையும் சேர்ந்திருக்கும் எனக் கேள்விபட்டிருக்கிறேன். அந்தக் கல்யாணத்தினை யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக மழை பெய்கிறது என்பார்கள். இதே நம்பிக்கை ஜப்பானிலும் இருக்கிறது. அதையே …

மழைக்குள் நடக்கும் திருமணம். Read More »

பால் செசானின் மனைவி

ஓவியர் பால் செசான் தனது மனைவி மேரி-ஹோர்டென்ஸ் ஃபிகெவை மாடலாகக் கொண்டு 29 ஓவியங்கள் வரைந்திருக்கிறார். எந்த ஓவியத்திலும் அவரது மனைவி புன்னகைக்கவில்லை. தீவிரமான முகபாவத்துடன் காணப்படுகிறார். பல்வேறு ஒவியர்களுக்கு மாடலாக விளங்கிய மேரி ஹோர்டென்ஸ் பாரீஸில் உள்ள ஒரு கலைப்பள்ளியில் செசானை முதன்முறையாகச் சந்தித்தார். அபபோது அவரது வயது 19. செசான் அவரை விட 11 வயது மூத்தவர். மேரியைக் காதலிக்கத் துவங்கிய செசான் அவருடன் இணைந்து வாழத் துவங்கினார் 1871 இல் பிராங்கோ-புருஷியன் போர் …

பால் செசானின் மனைவி Read More »

2026 – கோவை புத்தகத் திருவிழாவில்

இந்த முறை புத்தகத் திருவிழாவிற்காக ஐந்து நாட்கள் கோவையில் இருந்தேன். ஒவ்வொரு நாளும் புதிய வாசகர்களுடன் சந்திப்பு. உரையாடல், என மிகவும் மகிழ்ச்சியாக கழிந்தது. குறிப்பாக இருபது வயதிற்குள் இருக்கும் இளம்வாசகர்கள் நிறைய வந்திருந்தார்கள். அவர்கள் ஆசையாகப் புத்தகங்களை வாங்கிப் போனது சந்தோஷம் அளித்தது. தேசாந்திரி பதிப்பகத்திற்கு வாசகர்கள் அளித்த ஆதரவிற்கு மிகுந்த நன்றி. எனது புத்தகங்களை வாங்கி விற்பனை செய்யும் புத்தக விற்பனையாளர்கள் அனைவருக்கும் நன்றி. கல்லூரி மாணவர்கள். ஆய்வாளர்கள். பேராசிரியர்கள். மென்பொருள்துறையில் பணியாற்றுகிறவர்கள். மருத்துவர்கள். …

2026 – கோவை புத்தகத் திருவிழாவில் Read More »

கோவை புத்தக திருவிழாவில்

இன்று 25:07:26மாலை கோவை புத்தக திருவிழாவில் உரையாற்றுகிறேன். தலைப்பு: ஒளிரும் வார்த்தைகள் . மாலை ஆறு மணிக்கு புத்தக திருவிழா அரங்கில் உரை நடைபெறுகிறது.

திரைக்கதையின் திறவுகோல்

அகிரா குரோசேவாவின் சுயசரிதை அவரது திரைப்பட வாழ்வின் துவக்கத்தை மட்டுமே பதிவு செய்திருக்கிறது. ஆனால் “லாங் டேக்’“ குரோசாவாவின் எழுத்துக்கள், எழுத்தாளர் இனோயே ஹிசாஷி மற்றும் இயக்குநர் யமடா யோஜி ஆகியோருடனான அவரது உரையாடல்கள், மற்றும் அவரது மகள் குரோசாவா கசுகோவின் கட்டுரைகள் கொண்டதாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது. அதில் செவன் சாமுராய் திரைக்கதை உருவாக்கத்தினைப் பற்றி விவரிக்கும் போது டால்ஸ்டாயைக் குறிப்பிடுகிறார் “செவன் சாமுராய் திரைக்கதையின் மையப்பகுதியாக டால்ஸ்டாயின் ‘போரும் அமைதியும் (War and Peace ) நாவல் …

திரைக்கதையின் திறவுகோல் Read More »

தன்னை மறந்த புலி

கியூபாவைச் சேர்ந்த எழுத்தாளரான விர்ஜிலியோ பினேரா பெலிசாரியோ என்றொரு சிறுகதை எழுதியிருக்கிறார். இது பணக்காரப் பெண்ணை மணந்து கொண்ட ஒரு புலியைப் பற்றியது. கதையில் புலி மனிதனைப் போலத் தனக்கென ஒரு பெயர் கொண்டிருக்கிறது. அப் பெயர் தான் பெலிசாரியோ. பணக்கார வீட்டின் மருமகனான அப் புலிக்கு ஒரு உதவியாளர் இருக்கிறார். புலி தட்டச்சு இயந்திரத்தின் முன் அமர்ந்து பாரசீக மன்னருக்கு அவரது விருந்தில் கலந்து கொள்ள முடியாத நிலை குறித்து ஒரு கடிதம் எழுதுகிறது. தனது …

தன்னை மறந்த புலி Read More »

காலனியக் குற்றங்கள்

கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியன் கவிதை நிகழும் தருணங்களுக்கு அருகில் தன் கதைகளைப் படைப்பவர் எஸ். ராமகிருஷ்ணன். அந்த அடிப்படையில் காலனிய காலத்துக் குற்றவாளிகளைப் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய 25 கதைகள் கொண்ட ‘குற்றமுகங்கள்’ தொகுப்பை கவிதையின் அற்புத தருணங்களிலேயே நாயகர்கள், நாயகிகள் சஞ்சரிக்கும் காவியமென்றே வாசிக்க இயலும். எஸ். ராமகிருஷ்ணன் உருவாக்கிய காலனியகால குற்றவாளிகள் எல்லாரது வினோத நடவடிக்கைகளும் இந்த அடிப்படையிலேயே எனக்கு கவிதைகளாகத் தெரிகின்றன ஆண்கள், பெண்கள், பெண் வேடமிட்ட ஆண்கள் குற்றவாளிகளாக அலையும் குற்றமுகங்களில் கடைசி …

காலனியக் குற்றங்கள் Read More »

வீடு நடிக்கிறது

புதிய சிறுகதை ஜுலை 18 2026 நூற்றுப்பத்து வருஷங்களைக் கடந்த அவர்களின் வீடு சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தது. இது அவர்கள் வீட்டில் நடக்கும் பத்தாவது சினிமா படப்பிடிப்பு. விடிகாலை நான்குமணிக்கெல்லாம் படப்பிடிப்பிற்கான முன்தயாரிப்பு பணிகளைத் துவங்கியிருந்தார்கள். வீட்டுச்சுவரில் மாட்டப்பட்டிருந்த புகைப்படங்கள் யாவும் அகற்றப்பட்டிருந்தன. பிளாஸ்டிக் நாற்காலிகளை அகற்றி பிரம்பு நாற்காலி போட்டிருந்தார்கள். கதாநாயகியின் வீடாகப் படத்தில் காட்டுகிறார்கள் என்பதை மட்டுமே சாம்பு தெரிந்து கொண்டிருந்தார். லோக்கல் மேனேஜர் வாசுதேவன் தான் அவரோடு தொடர்பில் இருந்தார். ஒரு நாளைக்குப் …

வீடு நடிக்கிறது Read More »

கதைப்பயணி 5

தேசாந்திரி யூடியூப் சேனல் சார்பில் வெளியாகும் கதைப்பயணியின் ஐந்தாவது பகுதி வெளியாகியுள்ளது