புகைப்படத்தின் பின்னால்.
நோபல் பரிசு பெற்ற ஸ்வீடிஷ் எழுத்தாளரான செல்மா லாகர்லாஃப் உடன் சர்.சி.வி.ராமன் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் பார்த்தேன்.. 1930ம் ஆண்டு ராமன் நோபல் பரிசு பெறச் சென்ற போது எடுக்கபட்ட புகைப்படமது. நோபல் கமிட்டியின் பதினெட்டு நிரந்தர உறுப்பினர்களில் ஒருவராகச் செல்மா லாகர்லாஃப் இருந்தார். ஆகவே விருந்து நிகழ்வின் போது ராமனுடன் அமர்ந்திருக்கிறார். செல்மா லாகர்லாஃப்பின் அருகில் அமர்ந்திருப்பது ராமனின் மனைவி லோகசுந்தரி. மதுரையைச் சேர்ந்தவர். தீவிர இலக்கிய ஆர்வலர். மணிக்கொடி இதழுக்குச் சந்தா கட்டியிருக்கிறார். …
