லியர் அரசி
பெலின் எஸ்மர் இயக்கி 2019ல் வெளியான Queen Lear ஆவணப்படம் தெற்கு துருக்கியின் மலைப்பகுதியினுள் நாடகம் நிகழ்த்துவதற்காகச் செல்லும் பெண்கள் நாடகக்குழுவின் பயணத்தை விவரிக்கிறது அர்ஸ்லான்கோய் கிராமத்தைச் சேர்ந்த விவசாயப் பணியில் ஈடுபடும் பெண்களில் சிலர் ஒன்று சேர்ந்து ஒரு நாடகக்குழுவை உருவாக்குகிறார்கள். ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற கிங் லியர் நாடகத்தை நடத்துகிறார்கள். லியர் அரசனாக நடிப்பது ஒரு பெண். வெளியுலகம் அறியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் தொலைதூர கிராமங்களை நோக்கி அவர்கள் பயணம் மேற்கொள்கிறார்கள். நாடகத்தின் வழியே பாலின …
