தேசாந்திரி யூடியூப் சேனல் சார்பாக கதைப்பயணி என்ற புதிய காணொளித் தொடரை துவக்குகிறேன்.
சென்னையும் நானும், எஸ்ராவிடம் கேளுங்கள். திரைப்பயணி போன்ற எனது முந்தைய காணொளித் தொடர்கள் மிகச்சிறந்த வரவேற்பை பெற்றன.

ரஷ்ய இலக்கியங்கள் குறித்தும். உலகப்புகழ்பெற்ற எழுத்தாளர்கள். திரைப்பட இயக்குநர்கள் குறித்தும் நான் பேசிய விரிவான உரைகள் இணையத்தில் காணக்கிடைக்கின்றன. பல்வேறு புத்தக கண்காட்சிகளில் நான் ஆற்றிய உரைகள். எனது நூல் வெளியீட்டில் ஆற்றிய சிறப்புரைகள், புத்தக அறிமுகங்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட எனது உரைகளை தேசாந்திரி யூடியூப் சேனலில் நீங்கள் காணலாம்.
கதைப்பயணி என்ற இந்தக் காணொளி வரிசையில் உலகின் மிகச் சிறந்த சிறுகதைகள் குறித்துப் பேச இருக்கிறேன். அந்தக் கதைகள் எழுதப்பட்ட சூழல், கதையின் அழகியல் . இந்தக் கதைகள் வழியாக நாம் கற்றுக் கொள்ள வேண்டிய வாழ்வியல் உண்மைகள். பல்வேறு தேசங்களின் கதைமரபு, தமிழ் சிறுகதைகளின் சாதனைகள் எனப் பல்வேறு தளங்கள் குறித்துப் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.

தேசாந்திரி யூடியூப் சேனல் சார்பாக இதனை எனது பையன் ஹரிபிரசாத் உருவாக்குகிறான். கபிலா காமராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.
வாரம் வெள்ளிக்கிழமை யூடியூப்பில் இந்தக் காணொளித் தொடர் வெளியாகும்.
இதன் முதற்பகுதி ஜுன் 19 வெள்ளியன்று வெளியாகிறது. தேசாந்திரி யூடியூப் சேனல் உங்கள் அனைவரின் ஆதரவையும் நாடுகிறது.
நாம் அனைவரும் இணைந்து வாசிப்பை மேம்படுத்துவோம். சிறந்த இலக்கியங்களைக் கொண்டாடுவோம்.
தேசாந்திரி யூடியூப் சேனலைக் காண
