Search Results for: முனைவர் ப. சரவணன்

காழ்ப்புணர்வின் வடு

உறுபசி (நாவல்) – வாசிப்பனுபவம் முனைவர் ப. சரவணன், மதுரை. ‘உறு’ என்பது, ‘மிகுதி’ என்ற பொருளில் வரும் ஓர் உரிச்சொல். மிகுதியான ‘பசி’ என்ற பொருளில் இந்த நாவலின் தலைப்பு அமைந்துள்ளது. இந்தப் பசி எதைக் குறிக்கிறது?. நிச்சயமாக உணவை அல்ல. எல்லாவற்றின் மீதான ‘காழ்ப்புணர்வு’தான் இந்தப் ‘பசி’ என்று நான் கருதுகிறேன். அந்தக் காழ்ப்புணர்வு மிதமிஞ்சிப் போய்விடுகிறது. அதனால் ‘உறுகாழ்ப்புணர்வு’ என்றும் நாம் இந்த நாவலுக்குத் தலைப்பிடலாம். சரி, ‘இது யார் மீதான, எதன் …

காழ்ப்புணர்வின் வடு Read More »

டால்ஸ்டாயின் ஒளிரும் அகம்

 ‘மண்டியிடுங்கள் தந்தையே’ (நாவல்) – வாசிப்பனுபவம் முனைவர் ப. சரவணன், மதுரை. ரஷ்ய படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகளைப் படிக்கும்போது, அந்த நாட்டின் நிலக்காட்சி மனத்தில் பதிய மறுக்கும். அங்கு நிகழும் பனிப்பொழிவு நமக்கு அந்நியமானது. அவர்களின் பெயர்களும் அவர்களின் உடை, உணவு முறைகளும்கூட நமக்கு முற்றிலும் புதிதானவையே. அதனாலேயே நான் ரஷ்ய படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகளைத் திணறி திணறித்தான் படித்து முடிப்பேன். ஆனாலும் அவற்றில் உள்ள படைப்பு நயம் என்னை மயக்கிவிடும். அந்த மயக்கத்திற்காகவே நான் மீண்டும் …

டால்ஸ்டாயின் ஒளிரும் அகம் Read More »

காதலும் காதல் சார்ந்தவையும்

 ‘ஒரு சிறிய விடுமுறைக்காலக் காதல் கதை’ – வாசிப்பனுபவம் முனைவர் ப. சரவணன், மதுரை. கடுங்கோடையில் மழைக்காகக் காத்திருக்கும்போது வானிலிருந்து சரமென இறங்கும் கோடைமழையின் முதற்துளியைக் கையில் ஏந்தியது போன்றதுதான் பருவவயதில் வாய்த்துவிடும் முதற்காதலை வரவேற்கும் இளம் மனத்தின் நிலை. அந்த மனநிலையை வாழ்நாள் முழுவதும் மறக்கவே முடியாது. அதன் பின்னர் ஆயிரமாயிரம் பெருங்காதல்கள் வந்து மனத்தில் குடியேறியபோதும் அந்த முதற்காதல் நினைவுகள் கடுங்கோடையில் மண்ணில் விழுந்த முதல்மழையின் சுவடுகள்போலப் பதிந்தே இருக்கும். காதலைக் கொண்டாடாத படைப்பாளர்கள் …

காதலும் காதல் சார்ந்தவையும் Read More »

துணையெழுத்து – வாசிப்பனுபவம்

முனைவர் ப. சரவணன், மதுரை புனைவுக்கும் உண்மைக்குமான ‘இடைவெளி’, ‘தொலைவு’, ‘நெருக்கம்’ என்பன, நமக்கும் வாழ்வுக்குமான தொலைவினை ஒத்தவைதான். ‘நமக்கும் வாழ்வுக்குமான இடைவெளி’ என்பது, மிகவும் நெருங்கியிருக்கும் வெகுதொலைவுதானே! புனைவும் உண்மையும் ஒன்றையொன்று தழுவும்போதும் நாமும் வாழ்வும் ஒன்றாகிப் போகிறோம். நாமே பெரும்புனைவுதான்!. வாழ்வே பேருண்மைதான்!. ‘நமக்கும் வாழ்க்கைக்குமான உறவு’ என்பது, புனைவும் உண்மையும் கலந்த கட்டுரைக்கு நிகராது. தான்  பெற்ற ஆகச்சிறந்த அனுபவங்களையும் பிறரின் வாழ்க்கையின் வழியாகத் தான் கண்டுணர்ந்த ‘வாழ்வியல் சிடுக்கு’களையும் இணைத்துத் தனக்கேயுரிய …

துணையெழுத்து – வாசிப்பனுபவம் Read More »

புனைவெழுத்தின் வரைபடம்.

‘விழித்திருப்பவனின் இரவு – வாசிப்பனுபவம் முனைவர் ப. சரவணன், மதுரை அக இருளிலிருந்து முளைத்து, தலைநீட்டி வளர்ந்து, புறத்தில் பல வண்ணங்களில் ஒளிர்ந்து, மலர்வதுதானே படைப்பு! உலக அளவில் மிகவும் கவனிக்கத்தக்க படைப்பாளர்களுள் 28 பேரின் அகவாழ்வை அறிமுகப்படுத்தும் வகையில் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதியுள்ள புத்தகம் ‘விழித்திருப்பவனின் இரவு’. ஓர் எழுத்தாளரின் படைப்பைப் பற்றி முழுதும் அறிய வேண்டுமென்றால், நாம் அந்தப் படைப்பாளரின் அகவாழ்வை முழுதும் அறிந்துகொள்ள வேண்டும். அவர்களின் அகவாழ்வை அறிந்துகொள்வது அவ்வளவு …

புனைவெழுத்தின் வரைபடம். Read More »

தூரதேசவாதியின் நெடும்பயணக் குறிப்பு

 ( ‘உப பாண்டவம்’ நாவலை முன்வைத்து) முனைவர் ப. சரவணன்       எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய நாவல்களுள் முதன்மையானதும் முக்கியமானதுமான நாவல் ‘உப பாண்டவம்’. அதன் கதைக்களம் மகாபாரதம். இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் மகாபாரதம் பற்றிய அடிப்படைப் புரிதல் இருக்கும். காரணம், மகாபாரதம் இந்தியத் தொல் மரபில் நீக்கமுடியாத ஓர் அடுக்கு அடித்தளம். ஒட்டுமொத்த இந்தியக் குடிமக்களையும் நரம்பில் கோத்த மணிகளாக மாற்றி, மணிமாலையாக உருவாக்கி, ஒளிரச் செய்வது  மகாபாரதம் அன்றி வேறேது? அத்தகைய இந்தியக் …

தூரதேசவாதியின் நெடும்பயணக் குறிப்பு Read More »