admin

தாகூரின் குரலில்

இந்தியாவின் தேசிய கீதத்தை மகாகவி தாகூர் பாடும் காணொளி ஒன்றைக் கண்டேன். அவர் எழுதிய தேசியகீதத்தை அவரே பாடிக் கேட்பது அபூர்வமான தருணம். தாகூர் மெய்மறந்து பாடும் அழகும் ஜெயகே என உணர்ச்சிப்பூர்வமாகச் சொல்வதும் மனதைத் தொடுவதாக இருந்தது. நான் பள்ளியில் படித்த காலத்தில் மாணவர்களே ஜன கண மன சேர்ந்து பாட வேண்டும். வெறுமனே உதடு அசைத்தால் ஆசிரியர் கண்டுபிடித்துவிடுவார். ஆகவே மாணவர்கள் தேசியகீதத்தை மனப்பாடம் செய்து வைத்திருப்பார்கள். பள்ளி ஆண்டுவிழாவின் போது மட்டும் மாணவிகள் …

தாகூரின் குரலில் Read More »

துயிலின் ரகசியங்கள்

புரவி நவம்பர் இதழில் வெளியான நேர்காணல் நேர்காணல் செய்தவர் : கமலதேவி 1.நோய்மை என்பது வாதையா, மீட்சியா என்ற கேள்வி நாவல் முழுக்கச் சுழன்று வருகிறது. வாதை என்பதை ஏற்றுக்கொள்ள முடிகிறது. அது எவ்வகையில் மீட்சியாக வாய்ப்புள்ளது? நோய் உடலுடன் தொடர்பு கொண்டது என்றாலும் அது நிறைய மாற்றங்களை மனதளவில் கொண்டு வருகிறது. நோயுற்ற தருணங்களில் நாம் வயதை இழந்து விடுகிறோம். பிறரது அன்பிற்காக ஏங்குகிறோம். நோயுறும் போதெல்லாம் கடந்தகாலத்தை ஆராய்ச்சி பண்ண ஆரம்பிக்கிறோம். நோயிலிருந்து நலமடைந்தவுடன் …

துயிலின் ரகசியங்கள் Read More »

பனித்துளிகளைச் சேகரிப்பவள்.

இலக்கியத்தில் பதிவான சில சித்திரங்களை வாழ்நாளில் நாம் மறக்கமுடியாது. முதன்முறையாக வாசிக்கும் போது அடைந்த சந்தோஷத்தை இன்று வாசிக்கும் போதும் அந்த வரிகள் தருகின்றன. பனித்துளிகளைச் சேகரித்து வந்து அந்தப் பனிநீரால் முகத்தைக் கழுவிக் கொண்டால் அழகி ஆகிவிடுவாள் என நினைத்து ஒரு பேதைப் பெண் பனித்துளிகளைச் சேகரிக்கச் செல்லும் பாஸீ அலீயெவா Fazu Aliyeva நாவலில் வரும் அந்தக் காட்சி எத்தனை அற்புதமாக எழுதப்பட்டிருக்கிறது. இவ்வளவு அழகான ஒரு நாவலைத் தமிழில் மொழியாக்கம் செய்த பூ. …

பனித்துளிகளைச் சேகரிப்பவள். Read More »

நிகழ்ச்சி நிரல்

எனது படைப்புலகம் குறித்து நடைபெறவுள்ள ஒரு நாள் கருத்தரங்கின் நிகழ்வு நிரல். நவம்பர் 14 காலை பத்து மணி முதல் மாலை ஆறு மணி வரை இந்நிகழ்வு நடைபெறவுள்ளது. அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்

தேர் சிற்பங்கள்

தேவகியின் தேர் என்றொரு சிறுகதையை ஆறுமாதங்களுக்கு முன்பு எழுதியிருந்தேன். அந்தக் கதையில் ஊர் ஊராகச் சென்று தேரைப் புகைப்படம் எடுக்கும் ஒரு புகைப்படக்கலைஞரைப் பற்றி எழுதியிருக்கிறேன். பிரான்சு நாட்டைச் சேர்ந்த அந்த இளைஞன் தமிழகத்திலுள்ள அரிய தேர்சிற்பங்களைப் புகைப்படம் எடுப்பதற்காக அலைந்து கொண்டிருப்பான். அவன் தேவகியின் ஊருக்கு வந்து தங்கிய போது நடந்த அனுபவத்தைக் கதை விவரிக்கிறது. அதே போல தேர் சிற்பங்களைப் புகைப்படம் எடுக்கும் புகைப்படக்கலைஞரைப் பற்றி ஒரு கட்டுரை விகடன் தீபாவளி மலரில் வெளியாகியுள்ளது. …

தேர் சிற்பங்கள் Read More »

புகையில்லாத தீச்சுடர்

ஜே.கிருஷ்ணமூர்த்தியின் கட்டுரை ஒன்றை பி.கே. சிவகுமார் தமிழாக்கம் செய்து திண்ணை இதழில் வெளியிட்டிருக்கிறார். Commentaries on Living தொகுதியில் உள்ள சிறு கட்டுரையது. 2002ல் வெளியாகியுள்ளது ஜே.கிருஷ்ணமூர்த்தியின் கட்டுரையை மிகச் சிறப்பாக, நுட்பமாகச் சிவக்குமார் மொழியாக்கம் செய்திருக்கிறார். ஆழ்ந்த வாசிப்பும் புரிதலும் இல்லாமல் இது சாத்தியமில்லை. பி.கே.சிவக்குமாருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள் சிறப்பான மொழியாக்கத்தில் ஜே.கிருஷ்ணமூர்த்தியை வாசிப்பது மிக நெருக்கமான அனுபவத்தைத் தருகிறது. பி.கே.சிவக்குமார் இந்தக் கட்டுரைகளைத் தொகுத்து தனியே நூலாக வெளியிடவில்லை. ஒருவேளை அனுமதி …

புகையில்லாத தீச்சுடர் Read More »

அழைப்பிதழ்

நவம்பர் 14 ஞாயிறு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை எனது படைப்புகள் குறித்து ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வினை யாவரும் பதிப்பகம் மற்றும் நற்றுணை கலந்துரையாடல் அமைப்பு இணைந்து நடத்துகிறது. இந்த நிகழ்வு மயிலாப்பூரிலுள்ள நிவேதனம் அரங்கில் நடைபெறுகிறது. இந்த அரங்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் Yellow Pages அருகில் அமைந்துள்ளது. (234, Venkatachalam St, Dwarka Colony, Mylapore, Chennai – 600004) அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும்படி …

அழைப்பிதழ் Read More »

36 புகைப்படங்கள்

The Last Roll Of Kodachrome என்ற ஆவணப்படம் பிரபல புகைப்படக்கலைஞரான ‘ஸ்டீவ் மெக்குரி’ கடைசிக் கோடக்குரோம் படச்சுருளைப் பயன்படுத்தி 36 புகைப்படங்களை எடுப்பதை ஆவணப்படுத்தியிருக்கிறது படச்சுருள் தயாரிப்பில் கோடக் நிறுவனம் சர்வதேச அளவில் புகழ்பெற்றது. டிஜிட்டில் கேமிரா வந்தபிறகு படச்சுருளின் தேவை வெகுவாகக் குறைந்து போனதால் அந்நிறுவனம் தனது படச்சுருள் தயாரிப்பை 2009 ஜுன் 22ல் கைவிட்டது. கடைசியாக இருந்த ஒரு படச்சுருளை ஸ்டீவ் மெக்குரியிடம் கொடுத்து அவர் விரும்பும் புகைப்படங்களை எடுத்துக் கொள்ளச் சொன்னது …

36 புகைப்படங்கள் Read More »

அஞ்சலி

பெருமதிப்பிற்குரிய தோழரும் மதுரைக்கிழக்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நன்மாறன் இன்று காலமானார். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவரை அறிவேன். எளிமையும் நேர்மையும் கொண்ட அற்புதமான தோழர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சார்பில் 2001 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் மதுரை கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 10 ஆண்டுகள் பதவியிலிருந்தார். அந்த நாட்களில் மதுரை மக்களின் மேம்பாட்டிற்காகப் பல்வேறு நலத் திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறார். நன்மாறனின் மேடைப்பேச்சில் நகைச்சுவையும் சிந்தனை தெறிப்பும் ஒன்று கலந்திருக்கும். …

அஞ்சலி Read More »