சோம்பல் நாயகன்
ருஷ்ய இலக்கியத்தின் பிரதான படைப்பாளி களாக அறியப்பட்ட செகாவ் டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, கார்க்கி போன்றவர்களின் படைப்புகள் அறிமுகமான அளவு அதே காலகட்டத்தை சேர்ந்த பல முக்கிய படைப்புகள் உலக இலக்கிய பரப்பிற்குள் அறிமுகமாகவில்லை. அவை பல ஆண்டு காலமாக முறையான ஆங்கில மொழி பெயர்ப்பின்றி முடங்கி கிடந்துள்ளன. தஸ்தாயெவ்ஸ்கியும் டால்ஸ்டாயும் வியந்து போற்றி தங்களது எழுத்துலக போட்டியாளர் என்று வர்ணித்த இவான் கோன்சரோவின் (Ivan Goncharov) படைப்புகள் ஆங்கிலத்தில் நூறு வருடத்திற்கு பிறகு தற்போது தான் நல்ல மொழிபெயர்ப்பில் …