படித்ததும் பிடித்ததும் 1
தளசிங்கமாலை என்ற நூலிலுள்ளது இப்பாடல் “ஞாயிறு போய்விழத் திங்கள் வந்தெய்திடச்செவ் வாயனல் சோரப் புதன் அம்பு தூவ நல்வியாழன் வர வேயுறு வெள்ளி வலை சோர, நானுன்னை மேவுதற்குத் தாய் சனியாயினளே, ரகுநாத தளசிங்கமே“ இப்பாடலின் பொருள்: சூரியன் அஸ்தமிக்கச் சந்திரன் தோன்ற, சிவந்த வாயிலிருந்து விரக தாபத்தினால் வெப்பக்காற்று வீச, மன்மதன் பாணமெய்ய, தென்றல் வீச, மூங்கிலையத்த அழகிய வளையங்கள், விரக தாபத்தினால் சோர்ந்து விழ, நான் உன்னை வந்து சேர்வதற்குத் தாய் குறுக்கே நிற்கின்றாளே …