எனது பரிந்துரைகள் -4
புத்தகக் கண்காட்சியினை முன்னிட்டு ஐம்பதுக்கும் அதிகமான புதிய கவிதைநூல்கள் வெளியாகியுள்ளதாக அறிந்தேன். ஒரு சில நூல்களை மட்டுமே காண முடிந்தது. இளங்கவிஞர்களுக்கு எனது வாழ்த்துகள். நேஷனல் புக் டிரஸ்ட் அரங்கில் 50 சதவீத தள்ளுபடியில் மிகச்சிறந்த நாவல்கள் கிடைக்கின்றன. இந்திய அளவில் புகழ்பெற்ற இந்த நாவல்கள் இனி மறுபதிப்பு வருமா என்பது சந்தேகமே. ஒருவேளை வந்தாலும் அதன் விலை மிக அதிகமாக இருக்கும். நூறு ரூபாயில் இரண்டு மூன்று முக்கியமான நாவல்களை இங்கே வாங்கிவிட முடியும். கவிதாலயம், …









