admin

அஞ்சலி

அன்பிற்குரிய நண்பர் கருப்பு கருணா மறைந்தார் என்ற செய்தியை நம்பமுடியவில்லை. இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக பழகிய தோழன். திருவண்ணாமலை என்றாலே கருணாவும் பவாவும் தான். நானும் கோணங்கியும் எந்த இரவிலும் வந்து சேருவோம். அன்பு காட்டி ஆதரவு கொடுத்த தோழமைகள். எத்தனை நிகழ்வுகளை கருணாவும் பவாவும் நடத்தியிருக்கிறார்கள். மறக்க முடியாத நினைவுகள். கண்ணீர் கசிகிறது. அன்பின் நண்பன் கருணா மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

அக்காலம்- மஹாபலிபுரம்

அந்தக் காலத்தில் மஹாபலிபுரத்திற்கு படகில் போய் வந்திருக்கிறார்கள். அந்த நினைவுகளைச் சொல்லும் இந்தக் கட்டுரையை இன்று வாசிக்கையில் வியப்பாகவுள்ளது. ‘விவேக சிந்தாமணி’ இதழில் ச.ம. நடேச சாஸ்திரி எழுதிய குறிப்பு 1894 ஏப்ரலில் வெளியாகியுள்ளது. சென்னையிலிருந்து தெற்கே செல்லுகிற தென்னிந்தியா இருப்புப்பாதை வழியாகச் செங்கற்பட்டு சென்றால் ஒன்பது மைல் தூரத்திலுள்ள திருக்கழுக்குன்றம் என்ற திவ்விய க்ஷேத்திரத்தை ஜட்கா வண்டிகள் மூலமாய்ச் சேரலாம். இந்தவிடத்திலிருந்து ஒன்பது மைல் மேற்படி ஜெட்காவிலேயே ஏறிச் சென்றால் யாம் தலைப்பில் குறித்த மஹாபலிபுரம் …

அக்காலம்- மஹாபலிபுரம் Read More »

ஆங்கிலத்தில்

உறுபசி நாவலின் ஆங்கில மொழியாக்கம் கிறுகிறு வானம் நாவலின் ஆங்கில் மொழியாக்கம் எனது தேர்வு செய்யப்பட்ட சிறுகதைகளின் ஆங்கில மொழியாக்கம் தேசாந்திரியில் கிடைக்கிறது

தெலுங்கு மொழியாக்கம்

எனது தேர்வு செய்யப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு தெலுங்கில் வெளியாகிறது. இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் ஜி.பாலாஜி. நைல் நதி சாட்சிகா என்ற தலைப்பில் இந்த தொகுப்பு வெளியாகிறது. ஜி.பாலாஜி எனது யாமம் நாவலை முன்னதாக மொழியாக்கம் செய்திருக்கிறார். மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளர். இந்த தருணத்தில் தெலுங்கில் இந்த கதைகள் வெளிவர முன்முயற்சி எடுத்த நண்பர் குறிஞ்சி வேலன் அவர்களுக்கு மனம் நிரம்பிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒளியின் பயணம்.

லைட்டிங் என்பது ஒளியை ஒரு குறிப்பிட்ட விதமாக எடுத்துச் செல்வது.  கையாளுவது. மிகையான வெளிச்சம் காட்சியின் இயல்பைக் கெடுத்துவிடும் ஆகவே நான் பெரும்பாலும் ஒளியை விட நிழல்களைப் பயன்படுத்த விரும்புகிறேன் என்கிறார் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் வில்மோஸ் ஸிக்மண்ட். ஆஸ்கார் விருது பெற்றவர். ஹாலிவுட் இயக்குநர்கள். நடிகர்கள் பற்றி நிறைய ஆவணப்படங்கள் உருவாக்கபட்டுள்ளன. ஆனால் அதன் ஒளிப்பதிவாளர்கள். இசையமைப்பாளர்கள் பற்றி மிகக் குறைவான ஆவணப்பதிவுகளே காணப்படுகின்றன. ஹங்கேரியை பூர்வீகமாகக் கொண்ட ஒளிப்பதிவாளர் வில்மோஸ் ஸிக்மண்ட் பற்றிய ஆவணப்படமான …

ஒளியின் பயணம். Read More »

இரண்டு விநோதக் கதைகள்

குளிர்சாதனப் பெட்டி இசபெல் ஸாஜ்ஃபெர் தமிழில் : லதா ராமகிருஷ்ணன் என்னுடைய பாட்டி இறந்து விட்ட பிறகும் இடுகாட்டிற்குப் போக மறுத்தாள். நாங்கள் என்ன சொல்ல இயலும்? குளிர்சாதனப் பெட்டியிலிருந்த கீழ்தள அடுக்குகளை அகற்றிவிட்டு, அங்கே அவளை இடுப்புப் பகுதியிலிருந்து நேராய் நிமிர்த்திக் காய்கறி வைக்கும் ட்ரேயில் பொருத்தி வைத்தோம். நாங்கள் கைப்படியை இழுத்துத் திறக்கும்போதெல்லாம் அவள் புன்சிரிப்பாய்க் கேட்பாள் – ஹாய், எப்படியிருக்கிறாய் இன்று? நாங்கள் குளிர்சாதனப்பெட்டியின் கதவைத் திறந்து வைத்தபடி, அவளோடு அளவிளாவிய படியே …

இரண்டு விநோதக் கதைகள் Read More »

புத்தக வெளியீட்டுவிழா

தேசாந்திரி பதிப்பகம் சார்பில் டிசம்பர் 25 மாலை எனது ஆறு நூல்களின் வெளியீட்டு விழா நேரலையில் நடைபெறவுள்ளது. அதன் அழைப்பிதழைப் பகிர்ந்திருக்கிறேன். விருப்பமான வாசகர்கள், நண்பர்கள் இந்த நேரலை நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன் ஸ்ருதி டிவி யூடியூப் பக்கம் மற்றும் ஸ்ருதி டிவி முகநூல் பக்கத்தில் இந்த நேரலை ஒளிபரப்பாகும்.

இலக்கியப் பேருரை

டிசம்பர் 18 வெள்ளிகிழமை மாலை 4 மணிக்கு பி ஃபார் புக்ஸ் புத்தகக் கடையில் கிரேக்க நாடகமான ஈடிபஸ் குறித்து சிறப்புரை நிகழ்த்த இருக்கிறேன் சிறிய இடம் என்பதால் குறைவான நபர்களே கலந்து கொள்ள முடியும், ஆகவே முன்பதிவு செய்தல் அவசியம். 9042461472 தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்கள் வருகையை உறுதிப்படுத்திக் கொள்ளவும். முகவரி பி ஃபார் புக்ஸ் எஸ் ஜிபி நாயுடு காம்ப்ளெக்ஸ் தண்டீஸ்வரம் பேருந்து நிறுத்தம்பாரதியார் பார்க் எதிரில் வேளச்சேரி சென்னை 31

நேரலை நிகழ்ச்சி

டிசம்பர் 25 மாலை எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழா தேசாந்திரி பதிப்பகத்தில் நடைபெறவுள்ளது. வழக்கமாக ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெறும் எனது புத்தக வெளியீட்டு விழா இந்த ஆண்டு கரோனா காரணமாக அரங்க நிகழ்வாக நடைபெறவில்லை. ஆகவே டிசம்பர் 25 மாலை நாலரை மணிக்கு தேசாந்திரி பதிப்பகத்திலிருந்து ஸ்ருதி டிவி நேரலை நிகழ்ச்சியின் மூலம் புத்தக வெளியீடு மற்றும் வாசகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெறவுள்ளது. இதில் விருப்பமான வாசகர்கள் கலந்து கொண்டு கேள்விகள் கேட்கலாம். நேரலை …

நேரலை நிகழ்ச்சி Read More »