admin

நூலக மனிதர்கள் 24 ஜெர்மனியின் பரிசு

1980களில் பொது நூலகங்களுக்கு GDR Review என்ற ஆங்கில இதழை ஜெர்மன் தூதரகம் அனுப்பி வந்தது. அழகான வண்ண காகிதத்தில் மிக நேர்த்தியான புகைப்படங்களுடன் அந்த இதழ் வெளிவந்தது. கிராமப்புற நூலகத்தில் யார் ஆங்கில இதழைப் படிக்கப் போகிறவர்கள். ஆகவே நூலகர் இதழின் உறையைக் கூடப் பிரிக்காமல் அப்படியே போட்டு வைத்திருப்பார். நான் ஒருவன் தான் அதைக் கேட்டு வாங்கிப் பிரித்துப் படிப்பவன். அந்த இதழின் சார்பாக ஆண்டுக்கு ஒருமுறை புது டயரி மற்றும் காலண்டர் ஒன்றை …

நூலக மனிதர்கள் 24 ஜெர்மனியின் பரிசு Read More »

தெலுங்கில்

அவன் பெயர் முக்கியமில்லை என்ற எனது சிறுகதை தெலுங்கில் வெளியாகியுள்ளது. மொழியாக்கம் செய்திருப்பவர் ஜி.பாலாஜி.

ஆவநாழி

ஆவநாழிஎன்ற இணைய இதழை கவிஞர் சுதேசமித்ரன் நடத்தி வருகிறார். முன்பு ஆரண்யம் என்ற கலை இலக்கிய இதழை ஸ்ரீபதி பத்மநாபாவோடு இணைந்து கொண்டுவந்திருக்கிறார்., நான்கு இதழ்கள் வெளியாகியுள்ளன. இலக்கியம் சினிமா கலை என தீவிரமான கட்டுரைகள் நேர்காணல்களுடன் மிகச்சிறப்பான வடிவமைப்புடன் வெளியானது. சத்யஜித்ரேவின் பதேர் பாஞ்சாலி, பத்மராஜனின் ஓரிடத்தொரு பயில்வான், எம் டி வாசுதேவன் நாயரின் பெருந்தச்சன் மற்றும் ஷேக்ஸ்பியர் இன் லவ் ஆகிய படங்களின் முழுமையான திரைக்கதைகள் அதில் வெளியாகியிருந்ததை மறக்கமுடியாது. சுதேசமித்ரன் சிறந்த வடிவமைப்பாளர் …

ஆவநாழி Read More »

24 சிறுபாடல்கள்

கொரியாவின் புகழ்பெற்ற கவிஞரான கோ யுன் குறித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். சமகாலக் கவிஞர்கள் பற்றிய கவிதையின் கையசைப்பு என்ற தடம் இதழில் வெளியான பத்தியிலும் அவரைப் பற்றி விரிவான கட்டுரை எழுதியிருக்கிறேன். கவிஞர் சமயவேல் அவரது பத்து கவிதைகளை மொழியாக்கம் செய்து உதவியிருந்தார். தேர்வு செய்யப்பட்ட கோ யுன் கவிதைகளை 24 சிறுபாடல்கள் என்ற தொகுப்பாக விவேக் கிருஷ்ணன் மொழியாக்கம் செய்திருக்கிறார். விவேகானந்தன் திருச்சி பெல் நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிகிறார். இது …

24 சிறுபாடல்கள் Read More »

நூலக மனிதர்கள் 23 புத்தகங்களின் நிழலில்

நூலகத்தின் அருகிலே அவரது மெக்கானிக் ஷாப் இருந்தது. மணி என்ற அந்த மெக்கானிக் அடிக்கடி நூலகத்திற்கு வருவதைக் கண்டிருக்கிறேன். ஆனால் ஒருமுறை கூட அவர் புத்தகம் எடுத்துப் போவதைப் பார்க்கவில்லை. நூலகத்திலும் நாளிதழ் படிப்பதோ, வார இதழ்களைப் புரட்டுவதோ கிடையாது. பெரும்பாலும் மூலையில் உள்ள மரபெஞ்சில் உட்கார்ந்து கொண்டிருப்பார். மாலை நேரமாக இருந்தால் பேப்பர் படிக்கும் இடத்தில் நின்று கொண்டிருப்பார். படிக்காமல் எதற்காக இப்படி நின்று கொண்டேயிருக்கிறார் என்று யோசித்திருக்கிறேன். ஒரு நாள் மணியிடம் எனது நண்பனின் …

நூலக மனிதர்கள் 23 புத்தகங்களின் நிழலில் Read More »

ரஷ்யாவும் தமிழும்

ரஷ்யத் தமிழறிஞர் அலெக்ஸாந்தர் துபியான்ஸ்கி  மறைவை ஒட்டி ஈழத்தின் முக்கிய எழுத்தாளரான சாந்தன் பகிர்ந்துள்ள இந்தக் கட்டுரை சோவியத் நாட்டில் நடைபெற்ற தமிழாய்வுகள் குறித்து சிறப்பாகப் பதிவு செய்துள்ளது. •• சோவியத்தில் தமிழாய்வு – ஐயாத்துரை சாந்தன் ரஷ்ய மற்றும் சோவியத் இலக்கியங்கள் தற்காலத் தமிழ் இலக்கியப் பரப்பில் ஏற்படுத்திய தாக்கங்கள் ஓரு நீண்ட தனி ஆய்வுக்குரியவை. இவை தவிர்ந்த பிற தொடர்புகள் பற்றிய சில தகவல்களைத் தருவதே இக்கட்டுரையின் நோக்கம். தமிழ்மொழி பற்றிய ஆர்வமும் அதனைப் …

ரஷ்யாவும் தமிழும் Read More »

நூலக மனிதர்கள். 22 யயாதியின் நண்பர்

நூலகத்திற்கு வருபவர்களில் ஐம்பது வயதைக் கடந்தவர்கள் பெரும்பாலும் காண்டேகரின் யயாதி படித்தவர்கள். நிச்சயம் ஒன்றுக்கு மேற்பட்ட முறை அந்த நாவலைப் படித்திருப்பார்கள். சிலர் காண்டேகரின் எல்லா நாவல்களையும் வாசித்திருக்கிறார்கள் அவர்கள் பேச்சில் அன்றாடம் யயாதி இடம்பெறுவது வழக்கம். மராத்திய எழுத்தாளரான காண்டேகரைப் பலரும் தமிழ் எழுத்தாளர் என்றே நினைத்துக் கொண்டிருந்தார்கள். அந்த அளவு அவரைக் கா.ஸ்ரீ.ஸ்ரீ சரளமாகத் தமிழில் மொழிபெயர்த்திருந்தார் நூலகத்தில் அதிகமாக எடுத்துச் செல்லப்பட்ட புத்தகங்களில் ஒன்றாக யயாதி இருந்தது. நான் ஒரு முறை யயாதியை …

நூலக மனிதர்கள். 22 யயாதியின் நண்பர் Read More »

புயலுக்குப் பின்பு

நிவர் புயல் காரணமாக இரண்டு நாட்களாகச் சென்னையே முடங்கிப் போனது. நேற்று முழுவதும் மின்சாரத் தடை காரணமாக வீடு இயங்கவில்லை. எனது வீதியே முழு இருளில் மூழ்கிப் போனது. மாநகரம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது என்றார்கள். இடைவிடாத கன மழை. மழையுடன் பலத்த காற்றும் சேர்ந்து கொண்டது. செம்பரப்பாக்கம் ஏரியைத் திறந்துவிட்டதால் எங்கே வெள்ளம் வந்துவிடுமோ என்ற அச்சம் பலரிடமும் மேலோங்கியிருந்தது. அடையாறு,வேளச்சேரி, கோட்டூர்புரம் பகுதியில் வாழும் நண்பர்கள் தங்கள் பகுதியினை வெள்ளம் சூழ்ந்து வருவதைப் பதற்றமாகத் …

புயலுக்குப் பின்பு Read More »

நூலகமனிதர்கள் 21 நடமாடும் நூலகம்

நூலகங்களில் நடைபெறும் புத்தக அறிமுகக் கூட்டங்கள் எளிமையானவை. ஐம்பது பேருக்குள் தான் வருவார்கள். ஆனால் அக்கறையுடன் பேச்சைக் கவனிப்பார்கள். கேள்வி கேட்பார்கள். மேடை அலங்காரங்கள் கிடையாது. பொன்னாடை போட மாட்டார்கள். மைக் செட் வசதி கூட இருக்காது. ஆனால் அந்த கூட்டம் தரும் நெருக்கம் பெரிய மேடைகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள் தந்ததில்லை. சிறுநகரங்களில் இலக்கியக் கூட்டங்கள் நடத்தப்படுவது மிகக் குறைவு. அதுவும் திருக்குறள், கம்பராமாயணம், தேவாரம் திருவாசகம் தவிர்த்து வேறு புத்தகங்களைப் பற்றி நிகழ்ச்சிகள் நடைபெறுவது அபூர்வமே. …

நூலகமனிதர்கள் 21 நடமாடும் நூலகம் Read More »

அனோடியின் கால்பந்து

Two Half Times in Hell கால்பந்து விளையாட்டினை முன்வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்களில் மிக முக்கியமானது. பலமுறை இப்படத்தைப் பார்த்திருக்கிறேன். 1961ல் சோல்தான் ஃபாப்ரி இயக்கிய இந்தத் திரைப்படம் சினிமா வரலாற்றில் தனியிடம் பெற்றது. ஏப்ரல் 1944 ல் ஹிட்லரின் பிறந்த நாளை கொண்டாட, ஜெர்மனி ராணுவம் ஒரு கால்பந்தாட்ட போட்டி நடத்த விரும்புகிறது. ஜெர்மனி அணிக்கும் தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள போர் கைதிகளைக் கொண்ட அணிக்கும் இடையில் போட்டி ஏற்பாடு செய்கிறார்கள். இந்தப் போட்டி எவ்வாறு நடைபெற்றது …

அனோடியின் கால்பந்து Read More »