டிசம்பர் 25 மாலை நேரலை வழியாக எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. இதனை ஸ்ருதி டிவியுடன் இணைந்து தேசாந்திரி பதிப்பகம் நடத்துகிறது. மாலை 4 மணி முதல் 6 மணி வரை இந்த நிகழ்வு நடைபெறுகிறது. ஸ்ருதி டிவி முகநூல் மற்றும் யூடியூப் வழியாக இந்த ஒளிபரப்பு நடைபெறும்.
இதில் வெளியாகும் எனது குறுங்கதைகளின் தொகுப்பு.
கர்னலின் நாற்காலி
நகுலன் வீட்டில் யாருமில்லை என்ற குறுங்கதைகளின் தொகுப்பினை முன்பு வெளியிட்டிருக்கிறேன். இந்த தொகுப்பில் 125 குறுங்கதைகள் உள்ளன. இவை யாவும் இந்த ஊரடங்கு காலத்தில் எழுதப்பட்டவை.

அழகான கெட்டி அட்டை கொண்ட சிறப்பு பதிப்பு ஒன்றும் வெளியிடப்படுகிறது.
இரண்டு விதமான பதிப்புகளில் வெளியாகும் இந்த நூலை ஹரி பிரசாத் வடிவமைப்பு செய்துள்ளார். அட்டை வடிவமைப்பு :மணிகண்டன். சிறப்பு வடிவமைப்பு :குரு. பிழைத்திருத்தம் :சுப்பையா. உறுதுணை : அன்புகரன்
விலை ரூ 350
ஆன்லைன் ஷாப்பிங்
https://www.desanthiri.com/shop/
தொடர்புக்கு
தேசாந்திரி பதிப்பகம்
D1 ,Gangai apartments, 80 Feet Road, Sathya Garden, Saligramam, Chennai, Tamil Nadu 600093
CALL US
(044) 236 44947
(+91) 9600034659
desanthiripathippagam@gmail.com