இசையால் வென்றவர்.
நெருக்கமானவர்களின் மரணம். வழிகாட்டியாக இருந்தவர்களின் மரணம் எனத் தொடர்ந்து மரணச்செய்திகளைக் கேட்டுக் கேட்டு மனம் துக்கத்திலே துவண்டு போயிருக்கிறது. நேற்று முழுவதும் நண்பர்கள் பலரும் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவிற்கான துக்கத்தையும் அவரது இனிமையான பாடல்களைக் கேட்ட நாட்களையும் பகிர்ந்து கொண்டேயிருந்தார்கள். நான் அதிகம் சினிமா பாடல்களைக் கேட்பவனில்லை. ஆனாலும் என் கல்லூரி நாட்களில் நண்பர்கள் கூடி நிறையப் பாடல்களைக் கேட்டிருக்கிறோம். பாடல்களுக்காகவே ஒரு படத்தைப் பலமுறை பார்த்திருக்கிறோம். அந்த நாட்களில் கேசட்டில் சினிமா பாடல் பதிவு …