admin

விலகும் இருள்.

1947ல் வெளியான Calcutta என்ற ஆங்கிலப்படத்தைப் பார்த்தேன். John Farrow இயக்கியது. மூன்று விமானிகளின் வாழ்க்கையை விவரிக்கிறது. கொலை செய்யப்பட்ட நண்பனைப் பற்றிய விசாரணையை மேற்கொள்ளத் துவங்கும் நீல், எப்படி குற்றவுலகின் வலைப்பின்னலில் எப்படிச் சிக்கிக் கொள்கிறான் என்பதைச் சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார்கள். இரண்டாம் உலகப்போருக்குப் பிந்திய காலகட்ட கதையிது. நீல் கார்டன் (ஆலன் லாட்), பில் கன்னிங்ஹாம் (ஜான் விட்னி) மற்றும் பிளேக் (வில்லியம் பெண்டிக்ஸ்) என்ற மூன்று அமெரிக்க விமானிகள் சீனாவிலிருந்து கல்கத்தாவிற்கு விமானத்தில் பறந்து …

விலகும் இருள். Read More »

காலைக் குறிப்புகள் 1 தெற்கிலிருந்து வரும் குரல்

அன்றாடம் நான் வாசிக்கும் புத்தகங்களில் இருந்து சிறிய குறிப்புகளை எழுதி வைத்துக் கொள்வது எனது வழக்கம். அவற்றை வாசகர்களுடன் பகிர்ந்து தரலாம் என நினைத்து வெளியிடுகிறேன். இவை டயரிக்குறிப்புகள் இல்லை. வாசித்தவுடன் மனதில் தோன்றும் எண்ணங்கள். சில நேரம் ஒரு வரியோ, ஒற்றை நிகழ்வோ, கருத்தோ மனதில் பதிந்துவிடும். அவற்றைச் சேகரித்து வைத்துக் கொள்வேன். சில நேரம் படித்த விஷயத்தோடு தொடர்புடைய  பல்வேறு விஷயங்களைத் தொட்டுச் செல்லும் மனதின் அலைபாய்தலைப் பதிவு செய்து கொள்வேன். இவை எழுத்தாளனுக்கான கச்சாப் …

காலைக் குறிப்புகள் 1 தெற்கிலிருந்து வரும் குரல் Read More »

சிங்கப்பூர் கனவு.

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ஹெர்மன் ஹெஸ்ஸேயின் பயணநூல் Singapore Dream and Other Adventures: சின்னஞ்சிறிய நூல். இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியாவிற்கு ஹெஸ்ஸே மேற்கொண்ட மூன்று மாத காலப்பயண அனுபவத்தை 21 கட்டுரைகளாக எழுதியிருக்கிறார். ஒவ்வொன்றும் மூன்று நான்கு பக்கங்களே ஆகும். 1911ல் இந்தப் பயணத்தை ஹெஸ்ஸே மேற்கொண்டிருக்கிறார். ஹெஸ்ஸேயின் தாத்தா ஹெர்மன் குண்டர்ட் இந்தியாவில் மதப்பிரச்சாரம் செய்தவர். கேரளாவில் பணியாற்றிய கிறிஸ்துவ மிஷனரியில் இருந்தவர். அவருக்கு ஒன்பது இந்திய மொழிகள் தெரியும். அவரே …

சிங்கப்பூர் கனவு. Read More »

பந்தயக்குதிரை

ஃபிராங் காப்ரா இயக்கிய ஸ்டேட் ஆஃப் தி யூனியன் என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். 1948ல் வெளியானது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட முயற்சிக்கும் ஒரு மனிதனின் விருப்பம் மற்றும் அவரைச் சுற்றியுள்ளவர்களின் சூழ்ச்சிகள் பற்றிய நாடகமே படத்தின் கதை 1948 ல் கே தோர்ன்டைக் என்ற இளம்பெண் தனது தந்தையைச் சந்தித்து உரையாடுவதில் படம் துவங்குகிறது குடியரசு கட்சியின் பத்திரிக்கை அதிபரான கே தோர்ன்டைக் எவ்வாறு தனது காதலரான கிராண்ட் மேத்யூவை அமெரிக்க அதிபர் தேர்தலில் …

பந்தயக்குதிரை Read More »

நெரூதா

நோபல் பரிசு பெற்ற கவிஞர் பாப்லோ நெரூதா குறித்து சிறார்களுக்கான அறிமுகநூலை எழுதியிருக்கிறார் மோனிகா பிரௌன். அழகான வண்ணப்படங்களுடன் வெளியாகியுள்ளது. சிறார்களுக்காக எழுதப்பட்டபோதும் மிகுந்த கவித்துவமான சொற்களால் எழுதியிருக்கிறார் மோனிகா நெரூதாவின் உண்மைப்பெயர் NEFTALÍ RICARDO REYES BASOALTO 1904 ஆண்டு, ஜூலை 12 தேதி சிலி நாட்டில் உள்ள பாரல் என்ற ஊரில் பாப்லோ நெரூதா  பிறந்தார். இவர் பிறந்த சில நாட்களிலேயே அம்மா இறந்துவிடவே தந்தை, டோனா  ட்ரினிடாட் கார்டியா மார்வாடி என்பவரை மறுமணம்‌ …

நெரூதா Read More »

காந்தியின் நிழலில் -2 லூயி ஃபிஷரும் காந்தியும்

காந்தியின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள் சத்திய சோதனையைத் தான் முதலில் வாசிப்பார்கள். காந்தியின் வாழ்க்கையைப் பற்றி வின்சென்ட் ஷீன் எனும் அமெரிக்கப் பத்திரிக்கையாளர் எழுதிய புத்தகம், பிரஞ்சு எழுத்தாளர் ரோமன் ரோலந்த் எழுதிய காந்தி குறித்த புத்தகம் இரண்டும் முக்கியமானது. இதை ஜெயகாந்தன் வாழ்விக்க வந்த காந்தி என மொழியாக்கம் செய்திருக்கிறார், தற்போது ராமச்சந்திர குகா காந்தியின் வாழ்க்கையை மிக விரிவான இரண்டு பகுதி கொண்ட நூலாக எழுதியிருக்கிறார். லூயி ஃபிஷர் எழுதிய காந்தி …

காந்தியின் நிழலில் -2 லூயி ஃபிஷரும் காந்தியும் Read More »

மக்களாட்சியின் குரல்

1970ல் வெளியான Cromwell என்ற வரலாற்றுப்படத்தைப் பார்த்தேன் கென் ஹியூஸ் இப்படத்தை இயக்கியுள்ளார். கிராம்வெலாக நடித்திருப்பவர் ரிச்சர்ட் ஹாரிஸ். மன்னர் சார்லஸாக நடித்திருப்பவர் அலெக் கின்னஸ், இங்கிலாந்தில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது நாடாளுமன்ற படைகளுக்குத் தலைமை தாங்கிப் போரிட்டு வெற்றி தேடித் தந்தவர் ஆலிவர் கிராம்வெல் இங்கிலாந்தின் மன்னராட்சி முறையை மாற்றி மக்களாட்சி முறையை அமைப்பதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர். அவரது வாழ்க்கை வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை விவரிக்கும் விதமாகக் கிராம்வெல் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது, பிரிட்டீஷ் வரலாற்றுபடங்கள் …

மக்களாட்சியின் குரல் Read More »

ரிவேரா

மெக்சிகோவின் தலைசிறந்த ஓவியர் டீகோ ரிவேரா. டெட்ராயிட் நகரிலுள்ள ம்யூசியத்தில் ரிவேரா வரைந்த மிகப்பெரிய சுவரோவியத்தைக் கண்டிருக்கிறேன். மறக்க முடியாத ஓவியமது, அவரது வாழ்க்கையையும் ஓவியங்களையும் புரிந்து கொள்வதற்கு எளிய அறிமுக நூலாக உள்ளது ஜேநெட் மற்றும் ஜோனாஹ்வின்ட்டர் எழுதிய டீகோ ரிவேரா. நிவேதா இதைத் தமிழாக்கம் செய்திருக்கிறார். இரட்டைபிள்ளைகளில்  ஒருவராகப் பிறந்த ரிவேரா தனது சகோதரன் நோயினால் இறந்துவிடவே   அந்தோனியா என்ற பூர்வகுடி இந்தியப் பெண் பொறுப்பில் மலைகிராமத்தில் வளர்க்கபடுகிறார். அந்த வாழ்க்கை அவருக்குள் எப்படி …

ரிவேரா Read More »

ஞானக்கூத்தன்

கவிஞர் ஞானக்கூத்தனின் அபூர்வமான  புகைப்படம் ஒன்றை இணையதளத்தில் இன்று பார்த்தேன். சில நாட்களுக்கு முன்பு கவிஞர் தேவதச்சனோடு பேசிக் கொண்டிருக்கையில் ஞானக்கூத்தனின் மறைவை தன்னால் இன்னமும் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை என உணர்ச்சிப்பூர்வமாகப் பேசிக் கொண்டிருந்தார். ஞானக்கூத்தனின் புன்னகை வசீகரமானது.  பெரும்பான்மை புகைப்படங்களில் அவர் சிரித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படம் அவரது இளமையின் புன்னகையை அடையாளப்படுத்துகிறது. நன்றி https://www.gnanakoothan.com/

இனவரைவியலாளர்

ஹோர்ஹே லூயிஸ் போர்ஹெஸ் தமிழில் : ஷங்கர்ராமசுப்ரமணியன் அது டெக்சாசில் நடந்ததாக எனக்குச் சொல்லப்பட்டது. ஆனால் இன்னொரு மாநிலத்தில் நடந்த சம்பவம் அது. அந்தச்சம்பவத்தில் ஒரேயொரு முதன்மைப் பாத்திரம்தான் (ஒவ்வொரு கதையிலும் ஆயிரக்கணக்கான முதன்மைப் பாத்திரங்கள், தெரிந்தும் தெரியாமலும் உயிருடனும் இறந்தும் இருக்கத்தானே செய்கிறார்கள்). அந்த மனிதனின் பெயர், ப்ரெட் முர்டாக் என்று கருதுகிறேன். அவன் அமெரிக்கர்களைப் போலவே உயரமானவன்; அவனது முடி பொன்னிறமும் அல்ல, கருப்பும் அல்ல, அவனது தோற்றம் கூர்மையானது, அவன் மிகவும் குறைவாகவே …

இனவரைவியலாளர் Read More »