admin

ஆத்மாநாமிற்கும் குமாரசாமிக்குமான இடைவெளி

சிறுகதை ஆத்மாநாமிற்கும் எனக்குமான இடைவெளி நான்கு அடி தூரம். எவ்வளவு தான் நான் நெருங்கி நெருங்கிப்போனாலும் அந்த இடைவெளி அப்படியே தான் இருக்கிறது என்ற குரல் ஒலித்த போது டோக்கியோ செல்லும் விமானத்தில் பறந்து கொண்டிருந்தான் ஜோதிராம். அந்தக் குரல் குமாரசாமியுடையது, இருபத்திரெண்டு வருஷங்களுக்கு முன்பு ஒன்றாகக் கல்லூரியில் படித்தவன். ஒரு வருஷம் ஜுனியர், பக்கத்து இருக்கையில் அமர்ந்து கொண்டு பேசியது போல அத்தனை துல்லியமாக மனக்குரல் கேட்டது. பாதிசொருகியிருந்த கண்களைக் கசக்கிவிட்டபடியே மணி பார்த்தபோது இரவு …

ஆத்மாநாமிற்கும் குமாரசாமிக்குமான இடைவெளி Read More »

செகாவ் திரைப்படங்கள்

The Lady with the Dog https://youtu.be/7Jq0C9JV7W4 Three Days of Rain https://youtu.be/B-Mgb9KHQpE Romance with a double bass-1911 silent film https://youtu.be/CUAHAeQEH2c Romance with a Double Bass – colour https://youtu.be/2vGxAaneZwo THREE SISTERS by Anton Chekhov. https://youtu.be/GtTnUGF2XtU The Seagull – 1975 – Anton Chekhov https://youtu.be/qiPfPzt8azc A Joke – Short Film Adapted from Anton Chekhov https://youtu.be/JnKgUgpr288 Being: a movie based …

செகாவ் திரைப்படங்கள் Read More »

விளையாட்டுப் புத்தகங்கள்

ஆறு முதல் பனிரெண்டு வயதுள்ள குழந்தைகள் புத்தகம் படிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்பதற்காக இரண்டு விளையாட்டுப் புத்தகங்களை உருவாக்கியிருக்கிறேன். விளையாட்டுப் புத்தகங்கள் என்றால் என்ன ? வெறுமனே பக்கங்களைப் புரட்டிக் கதையைப் படித்துப் போவதற்குப் பதிலாகக் கதையில் சில சிக்கல்கள், சவால்கள், புதிர்களை இடம்பெறச்செய்து படிப்பவர் தன் கையில் உள்ள பகடையை உருட்டி எந்த எண் விழுகிறதோ அதற்கு ஏற்ப அந்தச் சிக்கலை, சவாலை எதிர் கொண்டு கடப்பதே விளையாட்டுப் புத்தகம் எனப்படுகிறது. ஐரோப்பிய மொழிகளில் …

விளையாட்டுப் புத்தகங்கள் Read More »

சஞ்சாரம் விமர்சனக்கூட்டம்

நேற்று டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெற்ற சஞ்சாரம் நாவலின் விமர்சனக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. எழுத்தாளர் விநாயகமுருகன். தமிழ்மகன். தீபா ஆகியோர் தங்களின் வாசிப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். அதைத் தொடர்ந்து கலந்துரையாடல் நடைபெற்றது. அதில் நாவல் எழுதுவது குறித்த எனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டேன். சிறப்பான இந்த நிகழ்விற்கு காரணமாக இருந்த நண்பர் வேடியப்பனுக்கும், நிகழ்வில் கலந்து  கொண்ட வாசகர்கள் அத்தனை பேருக்கும் மனம் நிரம்பிய நன்றி

சஞ்சாரம் விமர்சனக் கூட்டம்

எனது புதிய நாவல் “சஞ்சாரம்” குறித்த விமர்சனக்கூட்டம் பிப்ரவரி 7 சனிக்கிழமை மாலை ஆறு மணிக்கு டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெற உள்ளது வரவேற்புரை : மு.வேடியப்பன் நாவல் குறித்துப் பேசுபவர்கள் விநாயக முருகன் ஜா.தீபா தமிழ் மகன் இதனைத் தொடர்ந்து நாவல் குறித்து வாசகர்களுடன் கலந்துரையாடுகிறேன். இந்நிகழ்வில் அனைவரும்  கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன் ** Discovery bookpalace 6, Munusamy Salai, K .K. Nagar  Chennai – 600083

இன்னொரு பயணம்

போலீஷ் மொழி திரைப்படமான இடா ஆஸ்கார் விருது பரிந்துரையில் சிறந்த ஒளிப்பதிவு மற்றும் அயல்மொழி திரைப்படப் பிரிவில் இடம் பெற்றிருக்கிறது. படத்தின் இயக்குனர் Paweł Pawlikowski. இவர் Dostoevsky’s Travels என்ற படத்தை இயக்கியவர், இப்படம் தஸ்தாயெவ்ஸ்கி பெர்லின், பாரீஸ், லண்டன் நகரங்களுக்குப் பயணம் செய்த அதே வழியில் அவரது கொள்ளுப்பேரன் டிமிட்ரி பயணம் செய்வதை முன்வைத்து உருவாக்கபட்டது. இடா அவரது பத்தாவது படம், இப்படம் லண்டன் திரைப்படவிழாவில் சிறந்த படமாகத் தேர்வு செய்யப்பட்டு விருது பெற்றிருக்கிறது …

இன்னொரு பயணம் Read More »

தனஞ்ஜெயன்

யூடிவி தனஞ்ஜெயன்  தமிழ் சினிமாவை ஆவணப்படுத்துவதில் தீவிர நாட்டம் கொண்டவர். திரைப்படத்துறையில் பல ஆண்டுகளாகத் தீவிரமாக இயங்கிவரும் இவர்  Best of Tamil Cinema: 1931 to 2010 என்ற  நூல் ஒன்றினை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டிருக்கிறார். சமீபத்தில் இவர் எழுதியுள்ள பிரைட் ஆப் தமிழ்சினிமா, கோவா திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது.  இந்த நூலை நேற்றிரவு வாசித்தேன். தமிழ் சினிமாவை ஆவணப்படுத்துவதில் நாம் எப்போதுமே அக்கறையின்றி இருக்கிறோம் என்ற ஆதங்கம் நீண்ட காலமாகவே எனக்கிருக்கிறது. திரைப்படத்துறையும், …

தனஞ்ஜெயன் Read More »

நினைவின் குரல்

இந்த ஆண்டிற்கான ஆஸ்கார் விருது பரிந்துரைப்  படங்கள் ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதில் அமரோஸ் பெரோஸ், பேபல் உள்ளிட்ட முக்கியப் படங்களை இயக்கிய அலெஜாந்ரோ கொன்ஸாலேஸ் இன்னாரிட்டோ இயக்கியுள்ள பேர்ட்மேன் (Birdman) படம் பார்த்தேன். ஆஸ்கார் ஆஸ்கார் பட்டியலில் ஒன்பது பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.  நிச்சயம் பரிசுகளை அள்ளிக் கொண்டு போக உள்ளது என்பது உறுதி. இப்படத்தின் ஒளிப்பதிவு அபாரமானது. Emmanuel Lubezki இதன் கேமிராமேன் ஒரு ஷாட் இரண்டு நிமிசம் முதல் ஒன்பது நிமிசம் வரை …

நினைவின் குரல் Read More »

புத்தகக் கண்காட்சியில்

சென்னை புத்தகக் கண்காட்சியில் நாளை 17ம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு ஜென் கதைகள் குறித்துப் புத்தன் சொல்லாத கதைகள் என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன் . கண்காட்சி வளாக அரங்கில் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது *** கடந்த இரண்டு நாட்களாகப் புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள் 1)    பௌன்சர் -அலெக்ஸாண்ட்ரோ ஜோடோரோவ்ஸ்கி – முழுநீள கிராபிக் நாவல். – லயன் காமிக்ஸ் 2)    காளிதாசனின் கதை – சைலேஷ் -பப்ளிகேஷன்ஸ் டிவிசன் 3)    கூண்டுப்பறவை ஏன் …

புத்தகக் கண்காட்சியில் Read More »