நீதி மறுக்கப்பட்டவர்களின் குரல்
முருகபூபதி (ஆஸ்திரேலியா) சமகாலத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். அவருடைய கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள் படித்திருப்பதுடன், உலக இலக்கியப்பேருரைகளும் காணொளிக்காட்சியாக பார்த்து ரசித்து வியந்துமிருக்கின்றேன். இடக்கை என்னும் இந்த நாவல், இந்தியாவின் கடைசி மொகாலய சக்கரவர்த்தியின் அந்திமகாலத்தைப்பேசும் கதை. ஆலம்கீர் ஔரங்கசீப் பாதுஷா 1707 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி தனது 91 ஆவது வயதில் மறைந்திருக்கிறார் என்று வரலாற்று ஆசிரியர்கள் எழுதிய குறிப்புகளிலிருந்து பார்க்கின்றோம். இவ்வாறு துல்லியமாக அதற்கு முன்னர் …