admin

நெதர்லாந்திலிருந்து ஒரு பரிசு

எனது பிறந்த நாளுக்காக நெதர்லாந்தில் வசிக்கும் நண்பர் சரவணன் வான்கோ அருங்காட்சியகத்தில் கிடைக்கும் Van Gogh – The Potato Eaters 3D Print வாங்கி அனுப்பியுள்ளார். எனக்கு மிகவும் பிடித்த ஓவியமது. அதைப் பற்றி ஒரு குறுங்கதை எழுதியிருக்கிறேன். காலம் இதழில் வெளியாகியுள்ளது முப்பரிமாணத்தில் அந்த வீடும் மனிதர்களும் அசைவதைக் காணும் போது அந்த வீட்டிற்குள் நாமிருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. . சரவணனுக்கு எனது மனம் நிறைந்த நன்றி.

ஸ்வரித்தின் கவிதை

அமெரிக்காவில் வாழும் 13 வயதான ஆட்டிச நிலையாளர் ஸ்வரித் கோபாலன் சிறப்பாகக் கவிதைகள் எழுதுகிறார். அவரது ஆங்கிலக் கவிதைகளை வாசித்திருக்கிறேன். தனது உணர்வுகளை மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார். ‘Loud Echoes of the Soul’ என அவரது ஆங்கிலக்கவிதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. சிறந்த கவிதைக்காக இங்கிலாந்தில் இருந்து வழங்கப்படும் விருதைப் பெற்றிருக்கிறார். அவரது கவிதை ஒன்றின் தமிழாக்கம் பெரியார் பிஞ்சு இதழில் வெளியாகியுள்ளது. நல்ல கவிதை. நேர்த்தியான மொழியாக்கம் ஸ்வரித் இளையராஜா இசையின் மீது தீவிர ஈடுபாடு …

ஸ்வரித்தின் கவிதை Read More »

தூத்துக்குடியில்

எனது பிறந்தநாளை முன்னிட்டுத் தூத்துக்குடியில் சலூன் நூலகம் நடத்தும் நண்பர் பொன். மாரியப்பன் தபால் பெட்டி எழுதிய கடிதம் நூலைத் தபால் ஊழியர்களுக்கு வழங்கிச் சிறப்பித்துள்ளார் நூலக மனிதர்கள் இயக்கம் சார்பில் தூத்துக்குடி சிதம்பரநகர் தபால் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆசிரியர் R.ஜெயபால் அவர்கள் தலைமையில் சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் H சாய் ராமன் , சுங்க இலாகா அதிகாரி அசோ குமார் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்துள்ளார்கள் பொன்.மாரியப்பன், ஆசிரியர் ஜெயபால் மற்றும் நூலக …

தூத்துக்குடியில் Read More »

நிரந்தர விருந்தாளி

ஃபெர்னான்டோ ஸோரன்டினோவின் கதை ஒன்றில் ஸோரன்டினோ குடும்பத்தினர் பக்கத்துவீட்டில் உள்ளவர்களுடன் நட்பாகப் பழகுவதற்காகச் சிறிய பரிசு ஒன்றை அளிக்கிறார்கள். உடனே பக்கத்துவீட்டு வில்ஹெல்ம் அதை விடப் பெரிய பரிசு ஒன்றை திரும்ப அனுப்பி வைக்கிறார். அது போட்டி மனப்பான்மையை உருவாக்கிடவே ஒருவரையொருவர் மிஞ்சும் வகையில் பெரிய பெரிய பரிசுகளை மாறி மாறிக் கொடுத்துக் கொள்கிறார்கள். முடிவில் அது பேரழிவினை உருவாக்குகிறது. பக்கத்துவீட்டுக்காரரின் நட்பு பற்றிய இந்த வேடிக்கையான கதையின் எதிர்வடிவம் போலவே ஜே சாங்கின் 4PM கொரிய …

நிரந்தர விருந்தாளி Read More »

நாவல்வாசிகள் /2

எனது புதிய பத்தியான நாவல்வாசிகளில் புகழ்பெற்ற வங்க நாவலான நீலகண்டப் பறவையைத் தேடி குறித்து எழுதியிருக்கிறேன்.

பிறந்தநாள் விழா/ புகைப்படங்கள்

நேற்று கவிக்கோ மன்றத்தில் நடைபெற்ற எனது பிறந்த நாள் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது. நிறைய நண்பர்கள், வாசகர்கள் வந்திருந்து வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்கள். அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றி

நேர்காணல்

இந்து தமிழ் திசை இதழில் நேற்று வெளியான எனது நேர்காணல் நன்றி இந்து தமிழ் திசை நாளிதழ் மண்குதிரை.

பிறந்தநாள் விழா

நாளைக் காலை பத்துமணிக்கு சென்னை கவிக்கோ மன்றத்தில் மழைமான் சார்பில் எனது பிறந்தநாள் விழா சந்திப்பு நடைபெறுகிறது இதில் எனது நான்கு நூல்கள் வெளியிடப்படுகின்றன ரஷ்ய காதல் கதைகள் குறித்து சிறப்புரை நிகழ்த்துகிறேன் வாசகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வும் நடைபெறுகிறது அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்

நன்றி

பாரதிய பாஷா விருது பெற்றதற்காக வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. உங்களின் அன்பும் ஆசியும் தான் என்னைத் தொடர்ந்து செயல்பட வைக்கிறது. இந்தத் தருணத்தில் எனது பெற்றோர்கள், மனைவி பிள்ளைகள், ஆசிரியர்கள். சகோதர சகோதரிகள், நண்பர்கள், பத்திரிக்கை ஆசிரியர்கள். சக எழுத்தாளர்கள், வாசகர்கள் அனைவரையும் நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன். உங்களின் குவிந்த கரங்கள் தான் எனது எழுத்தெனும் சுடரைப் பாதுகாக்கிறது. விருதுச் செய்தியைச் சிறப்பாக வெளியிட்டு என்னைக் கௌரவப்படுத்திய பத்திரிக்கை, தொலைக்காட்சி, இணையதளம், மற்றும் …

நன்றி Read More »