நான்கு புதிய நூல்கள்
எனது நான்கு புதிய நூல்கள் டிசம்பர் 25 மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் வெளியிடப்படவுள்ளன.
எனது நான்கு புதிய நூல்கள் டிசம்பர் 25 மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் வெளியிடப்படவுள்ளன.
எனது புதிய சிறுகதைத் தொகுப்பு கவளம் டிசம்பர் 25 மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் வெளியாகிறது. இந்த நூல் குறித்த அறிமுகவுரையை நிகழ்த்துகிறார் ப. சேரலாதன். ஜெர்மன் மொழி ஆசிரியரும், மொழிபெயர்ப்பாளருமான சேரலாதன் சென்னையில் உள்ள கதே நிறுவத்தில் பணியாற்றுகிறார்.
கவிஞர் மதாரின் புதிய கவிதைத்தொகுப்பு மாயப்பாறை வெளியீட்டு விழா டிசம்பர் 18 மாலை சென்னை அண்ணா நூலக அரங்கில் நடைபெறுகிறது. இந்த நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறேன். அழிசி பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது, அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்.
நூல் வாசிப்பு முற்றம் சார்பாக இன்று இரவு ஏழு மணிக்கு இணைய வழியாக யாமம் நாவல் குறித்த கருத்துரை நிகழ்வு நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்.
. 1952ல் வெளியான திரைப்படம் The Bad and the Beautiful. வின்சென்ட் மின்னெல்லி இயக்கியுள்ளார். இது சினிமாவைப் பற்றிய சினிமா. பொதுவாகச் சினிமா எடுப்பதைப் பற்றிய திரைப்படங்கள் வெற்றி பெறுவதில்லை. Sunset Boulevard, Day for Night 8½ போல அபூர்வமாகச் சில படங்கள் பெரிய வரவேற்பையும் வெற்றியும் பெற்றிருக்கின்றன. அந்த வரிசையில் இடம்பெறும் படமிது. 1950களின் ஹாலிவுட் ஸ்டுடியோ இயங்கும் முறையினையும், அந்தக் காலத் தயாரிப்பாளர்களின் கெடுபிடிகள். மற்றும் நடிகர் நடிகைகளின் ஈகோ, சினிமா …
குறுங்கதை அந்த அரண்மனை இப்போது மியூசியமாக மாற்றப்பட்டிருந்தது. அதிலும் ஒரு பகுதியை அலுவலகமாக மாற்றியிருந்தார்கள். அலங்காரத்தையும், ஆடம்பரமான பொருட்களை இழந்த அரண்மனையைக் காணுவதற்கு யார் வரப்போகிறார்கள். ஒரு நாளுக்குப் பத்துப் பதினைந்து பார்வையாளர்கள் வருவதே அபூர்வம் என்றார்கள். மன்னர் குடும்பத்தின் வாரிசுகள் இப்போது அமெரிக்காவில் வசித்து வருவதாகச் சொன்னார்கள். முன்பு தர்பார் ஹாலாக இருந்த அறையை இப்போது ஓவியக் கூடமாக மாற்றியிருந்தார்கள். பல்வேறு ஐரோப்பிய ஒவியர்கள் மன்னர் குடும்பத்தை வரைந்திருக்கிறார்கள். சில ஓவியர்களைக் குடும்பத்துடன் வரவழைத்து அரண்மனையிலே …
. மனித உரிமைகளுக்காக வாதிடும் வழக்கறிஞர் பிலிப் சாண்ட்ஸ் எழுதிய East West Street நூலைப் பற்றி நண்பர் சர்வோத்தமன் சடகோபன் இணையதளத்தில் தான் தெரிந்து கொண்டேன். அந்த நூலைப் பற்றி அவர் சிறப்பான அறிமுகத்தைக் கொடுத்திருந்தார். உடனே அதை இணையத்தின் வழியே வாங்கிப் படித்தேன். வியப்பூட்டும் தகவல்களுடன் உள்ள அரிய நூல். நீதித்துறை சார்ந்தவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம். உண்மையில் இது ஒரு பெரிய நாவலாக எழுத வேண்டிய கருப்பொருளைக் கொண்டது. பிலிப் சாண்ட்ஸ் …
சிறார் நாவல் விமர்சனம் – கே.பாலமுருகன். மலேசியா பாடநூலைத் தாண்டிய வாசிப்பென்பது பெரும்பாலும் ‘எதற்கு, என்ன நன்மை’ என்கிற கேள்விகளுக்குள் சுழன்று தவித்துக் கொண்டிருக்கிறது. பாடநூல் அறிவென்பது மாணவர்களின் வயது, ஆற்றல், திறன், கருப்பொருள் என்பதைக்குட்பட்டு தயாரிக்கப்படுவதாகும். அதனையொட்டி போதிக்கும்போது மேற்கோள்களாக இலக்கியம், வரலாறு, சமூகவியல் எனப் பலவற்றை அணுகிச் செல்ல முடியும். ஆனால், இலக்கிய வாசிப்பென்பது சிறார்களின் மனத்தை மகிழ்ச்சிக்குள்ளும் கொண்டாட்டத்திற்குள்ளும் ஆழ்த்தக்கூடிய சாத்தியங்களை உடையதாகும். ஒரு சிறார் நாவல் அல்லது சிறார் கதைகளை வாசிக்கும்போது …
முன்பணம் கொடுத்த பதிப்பாளரின் ஒப்பந்தப்படி முப்பது நாட்களுக்குள் ஒரு நாவலை எழுதி முடிக்க வேண்டிய கட்டாயம் பியோதர் தஸ்தாயெவ்ஸ்கிக்கு ஏற்பட்டது. அதற்காக இளம் பெண்ணான அன்னாவை சுருக்கெழுத்தாளராக வைத்துக் கொண்டார். அப்போது அன்னாவின் வயது 20. அந்த நாட்களை விவரிக்கும் Twenty six days in the life of Dostoevsky திரைப்படம் இணையத்தில் காணக் கிடைக்கிறது .Aleksandr Zarkhi இயக்கியுள்ள இப்படம் 1981ல் வெளியானது. இந்த நிகழ்வுகளை மையமாகக் கொண்டு தஸ்தாயெவ்ஸ்கியின் சங்கீதம் என்றொரு நாடகத்தை …
அமெரிக்க கவிஞர், கட்டுரையாளர், இயற்கையியலாளர் எமர்சன் குறித்த சிறப்புரை ஒன்றை நிகழ்த்துகிறேன் டிசம்பர் -25. 2024 – புதன்கிழமை கவிக்கோ மன்றத்தில் இந்த உரை நடைபெற இருக்கிறது. டிசம்பர் 25 மாலை ஆறு மணிக்கு எனது புதிய நூல்களின் வெளியீட்டு விழா சென்னை சிஐடி காலனியில் உள்ள கவிக்கோ மன்றத்தில் நடைபெறவுள்ளது. அந்த நிகழ்வின் ஒரு பகுதியாக இந்த சிறப்புரையை நிகழ்த்துகிறேன்