admin

புதியபுத்தகங்கள்

இந்த ஆண்டு எனது நான்கு புதியபுத்தகங்களை உயிர்மை பதிப்பகம் வெளியிட உள்ளது, அதன் வெளியீட்டு விழா தி,நகர் சர்.பி.டி, தியாகராயர் ஹாலில் டிசம்பர் 10ம் தேதி  எனது உலகசினிமா பேருரை நிகழ்வோடு சேர்ந்து நடைபெற உள்ளது, வெளியிடப்பட உள்ள புத்தகங்கள் பற்றிய விபரம் மழை மான் – சமீபத்திய சிறுகதைகளின் தொகுப்பு ரயிலேறிய கிராமம் -உலகப்புகழ்பெற்ற முப்பது புத்தகங்களைப் பற்றிய அறிமுக நூல் பறவைக்கோணம் -உயிர்மை இதழில் தொடராக வெளிவந்த தமிழ்சினிமா பற்றிய கட்டுரைகள் பிகாசோவின் கோடுகள் …

புதியபுத்தகங்கள் Read More »

பிரெஞ்சில்

எனது சிறுகதை `இயல்பு` பிரெஞ்சில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது, இதைச் சிறப்பாக மொழியாக்கம் செய்திருப்பவர் வெங்கட சுப்புராய நாயகர், பிரான்சில் வாழும் எழுத்தாளர் நாகரத்னம் கிருஷ்ணா , தமிழுக்கும் பிரெஞசு இலக்கியத்திற்குமான உறவை ஏற்படுத்துவதற்காக உருவாக்கியுள்ள இணையதளத்தில் இக்கதை வெளியாகி உள்ளது https://franceindechassecroise.wordpress.com/

பேருரை -அறிவிப்பு

உலக சினிமா பேருரைகளில் கலந்து கொள்ள ஏதாவது கட்டணம் உள்ளதா எனப் பலரும் கேட்டுள்ளார்கள், கட்டணம் எதுவுமில்லை விருப்பமுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம், சென்ற ஆண்டு வெளியானதைப் போலவே இந்த ஆண்டும் பேருரைகள் தனிடிவிடியாகவும் வெளியிடப்பட இருக்கின்றன டிசம்பர் 4 முதல் 10 வரை  தினமும் மாலை 6 மணிக்கு நிகழ்ச்சி நடைபெற உள்ளது, இதில் ஞாயிறு மட்டும் காலை 10.30 மணிக்கு நிகழ்ச்சி நடைபெற உள்ளது அரங்கில் உயிர்மை வெளியிட்டுள்ள எனது புத்தகங்களும், சென்ற ஆண்டு …

பேருரை -அறிவிப்பு Read More »

காந்தியைப் பின்தொடர்வது

இந்த ஆண்டு மகாத்மா காந்தி குறித்து நான்கு விரிவான உரைகளை நிகழ்த்தியிருக்கிறேன்,  மதுரை, திருச்சி, கடலூர், சென்னை ஆகிய நான்கு இடங்களிலும் நான்கு வேறு விதமான தலைப்புகள், அதில் மூன்று கூட்டங்கள் மாணவர்கள் மத்தியில், ஒன்று எனது புத்தக வெளியீட்டுவிழாவில். ஒவ்வொரு கூட்டத்தின் துவக்கத்திலும் காந்தியின் குரலை இரண்டு நிமிஷம் ஒலிக்கவிடுவேன், காந்தியை ஒரு புகைப்படமாக, சிலையாக, பிம்பமாகத் தான் நாம் புரிந்து கொண்டிருக்கிறோம், அவரது குரலை இந்த தலைமுறையினர் கேட்கவேயில்லை, அதற்காக இரண்டு நிமிஷங்கள் காந்தியின் …

காந்தியைப் பின்தொடர்வது Read More »

மண்ணில் விழும் தானியம்

Truly, truly, I say to you, unless a grain of wheat falls into the earth and dies, it remains alone; but if it dies, it bears much fruit- bible என்ற பைபிள் வாசகத்தை டால்ஸ்டாய் தனது டயரியில் அடிக்கோடிட்டு குறித்திருக்கிறார், அவருக்கு மிகவும் விருப்பமான வாசகமிது, அதை வாசித்த நிமிஷத்தில் இருந்து அதைப்பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். மரணத்திற்குப் பிறகு தன்னை கல்லறையில் புதைக்க கூடாது, கல்லறைவாசகம் …

மண்ணில் விழும் தானியம் Read More »

உலக சினிமா பேருரைகள்

சென்ற ஆண்டு உலக இலக்கியம் குறித்து ஏழுநாட்கள் பேருரைகள் ஆற்றியது போல இந்த ஆண்டு உலகசினிமா குறித்து ஏழுநாட்கள் தொடர்சொற்பொழிவு நடத்த இருக்கிறேன், இந்த நிகழ்வினை உயிர்மை பதிப்பகம் ஏற்பாடு செய்கிறது டிசம்பர் 4 முதல் டிசம்பர் 10 வரையான ஏழு நாட்கள், சென்னை தி.நகரில் உள்ள சர் பிடி தியாகராயர் ஹாலில் தினமும் மாலை ஆறுமணிக்கு இந்த கூட்டம் நடைபெற உள்ளது, ••• டிசம்பர் 4  செவ்வாய்கிழமை மாலை – அகிரா குரசேவா டிசம்பர் 5 …

உலக சினிமா பேருரைகள் Read More »

காந்தி வழிகாட்டுகிறார்

2009 ஆண்டு வெளியான ஹிந்திப்படம் Road to Sangam , வழக்கமான பொழுது போக்குப்படங்களுக்கு இடையில் இதன் வருகை கவனிக்கப்படாமலே போய்விட்டது, காந்தி குறித்து இந்தியாவில் எடுக்கபட்ட திரைப்படங்களில் முக்கியமான படமிது இந்தப்படம் மூன்று தளங்களில் செயல்படுகிறது, ஒன்று, காந்தி குறித்து இன்றைய தலைமுறையினரிடம் உள்ள வெறுப்பை, அதன் பின்னுள்ள அரசியலை, அறியாமையைக் கவனப்படுத்துகிறது, இரண்டாவது இஸ்லாமிய சமூகம் மகாத்மா காந்தியை எவ்வாறு மதிப்பிடுகிறது என்பதை யதார்த்தமாக காட்சிப்படுத்தியிருக்கிறது, மூன்றாவது, மதக்கலவரங்கள் உருவாகின்ற சூழலில் காந்தியின் முக்கியத்துவம் …

காந்தி வழிகாட்டுகிறார் Read More »

இலக்கிய இணைய தளங்கள்

உலக இலக்கியத்தின் முக்கியப் புத்தகங்கள் மற்றும் சர்வதேச இலக்கிய இதழ்களை ஆன்லைனில் வாசிக்கவும், தரவிறக்கம் செய்து கொள்ளவும் உதவும் இணைய தளங்கள் https://www.aldaily.com/ https://wordswithoutborders.org/?gclid=CNvD4NraqrMCFYh66wodBxcAOw https://www.drunkenboat.com/ https://www.readprint.com/books-1/Non-Fiction https://www.doubleroomjournal.com/ https://www.granta.com/ https://www.classicreader.com/ https://www.literaturecollection.com/ https://www.thefreelibrary.com/ https://www.free-book.co.uk/ https://www.online-literature.com/ https://www.gutenberg.org/ https://www.victorianweb.org/ https://www.kstrom.net/isk/stories/stories.html https://www.poetrysociety.org.uk https://www.bookforum.com/ https://therumpus.net/ https://www.themillions.com/ https://bookslut.com/ https://maudnewton.com/blog/ https://www.roalddahlfans.com/ https://www.tolkiensociety.org/ https://infomotions.com/alex/?cmd=names https://jacklondons.net/ https://www.literature.org/authors/ https://www.bibliomania.com/ https://robaroundbooks.com/shortfiction/ https://www.sensitiveskinmagazine.com/ https://www.archipelago.org/ https://www.recirca.com/ https://www.tol.org/client/ https://www.abalonemoon.com/ https://absinthe-literary-review.com/ https://www.inkandashes.com/issue2/index.php https://jacketmagazine.com/00/home.shtml https://www.janushead.org/ https://thebestamericanpoetry.typepad.com/ https://www.literarysalt.com/issue1.html https://webdelsol.com/tpp/ …

இலக்கிய இணைய தளங்கள் Read More »

குறும்பட இணைப்பு

தரமணியில் கரப்பான்பூச்சிகள்  என்ற  எனது சிறுகதையை அஸ்வின் குறும்படமாக எடுத்துள்ளார், அந்தக் காணொளியின் இணைப்பு Tharamaniyil Karapaanpoochigal – Tamil Short film https://youtu.be/uNB791-mu7M ***