புல்லினைக் கடக்கும் காற்று
ஒனா நோ கோமாச்சி (Ono no Komachi) எனும் ஜப்பானியப் பெண் கவிஞரின் பெயரை ஒரு அரிசிக்கு வைத்திருக்கிறார்கள் என்று கேள்விபட்டேன், தானியம் ஒன்றுக்குக் கவிஞரின் பெயரை வைத்திருப்பதைப் பற்றி யோசித்துக் கொண்டேயிருந்தேன், ஒரு கவிஞனுக்குக் கிடைக்கும் பொருத்தமான கௌரவம் அதுவெனத் தோன்றியது கோமாச்சி எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண் கவிஞர், பேரழகி, இன்றும் ஜப்பானில் ஒப்பற்ற அழகு கொண்ட பெண்ணைக் கோமாச்சியாக இருக்கிறாள் என்றே குறிப்பிடுகிறார்கள், ஒனா நோ கோமாச்சி பற்றிய சுயவிபரக்குறிப்புகள் அதிகம் கிடைக்கவில்லை, ஆனால் …